என்னோட குறிக்கோள் இது மட்டும் தான் இருந்துச்சி – 150+ KMPH வேகப்பந்து வீச்சாளர் அறிமுக வீரர் மயங்க் யாதவ் பேச்சு.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கும் தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங்கை தேர்வு செ
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கும் தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங்கை தேர்வு செய்ய அது சரியான முடிவாக சென்றது. லக்னோ அணியின் துவக்க பேட்ஸ்மேன்கள் முதல் இரண்டு ஓவர்களில் கொஞ்சம் நிதானமாக ஆடினாலும் 3வது ஓவரில் இருந்து அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர்.
இருந்த போதிலும் ராகுல் 9 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க பின்னர் வந்த பேட்ஸ்மேன்களும் நிலைக்காமல் ஆட்டமிழந்தனர். டீ காக் மட்மே பொறுமையாக விளையாடி அரை சதம் அடித்த போதிலும் அவரும் ஆட்டமிழக்க அதிரடியாக விளையாடிய பூராண் 21 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த குணால் பாண்டியா அதிரடியாக விளையாடி ரன்களை உயர்த்த இறுதியில் லக்னோ அணி 8 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை அடித்தது.
பின்னர் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்கம் அற்புதமாக இருந்தது. இதனை பார்த்த பலரும் பஞ்சாப் இன்று வெற்றியடையும் என்று நினைத்த போது பேர்ஸ்டோவின் விக்கெட் விழுந்தது. அது போட்டியின் திருப்புமுனையாக இருந்தது.பின்னர் வந்த பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது பஞ்சாப். இந்த போட்டியில் மயங்க் யாதவ் சிறப்பாக விளையாடி முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த போட்டியில் 150+ KMPH வேகத்தில் வீசி அணியை வெற்றி பெற வைத்ததற்கு பிறகு மயங்க் யாதவ் கூறுகையில், அறிமுகப் போட்டிகளில் பதற்றம் இருப்பதாக நான் எப்போதும் மற்றவர்களிடம் இருந்து கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் அது முதல் பந்திற்குப் பிறகு போய்விடும். அதிக அழுத்தத்திற்கு ஆளாகாமல், ஸ்டம்ப்களில் பந்துவீசவும், முடிந்தவரை வேகத்தைப் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டது. ஆரம்பத்தில் வேகத்தை கலக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.
ஆனால் விக்கெட் உதவியது மற்றும் கேப்டன் என்னிடம் கேஸ் வீச சொன்னார். அறிமுக விக்கெட் பிடித்தது. கடந்த சீசனில் காயத்தில் இருந்து வெளியேறுவது கடினமாக இருந்தது, இளம் வயதிலேயே அறிமுகமாக வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்தேன், ஆனால் காயங்கள் ஒரு பின்னடைவை ஏற்படுத்தியது என்றும் அவர் கூறினார்.