வரலாற்றில் முதல் முறையாக உலக கோப்பை போட்டியில் இருந்து வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்.
உலக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை ஒருநாள் போட்டியானது வரும் ஆக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் விளையாடும் அணிகளுக்கு ஏற்கனவே அட்டவணையானது வெளியிடப்பட்ட நிலையில் தற்போது உலக கோப்பை தகுதி சுற்றானது ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வர
உலக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை ஒருநாள் போட்டியானது வரும் ஆக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் விளையாடும் அணிகளுக்கு ஏற்கனவே அட்டவணையானது வெளியிடப்பட்ட நிலையில் தற்போது உலக கோப்பை தகுதி சுற்றானது ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வருகிறது. உலக கோப்பபை குவாலிபயரலின் முதல் சுற்று சமீபத்தில் நிறைவடைந்தது.
இந்நிலையில் இரண்டாவது சுற்றுக்கு வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாவே, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, ஓமன், இலங்கை உள்ளிட்ட அணிகள் தகுதி பெற்றனர். இந்நிலையில் இதில் முதல் போட்டியானது ஓமான் மற்றும் ஜிம்பாவே அணிகளுக்கு எதிராக நடந்தது. இதில் சிறப்பாக விளையாடிய ஜிம்பாவே வெற்றிபெற்றது. இதனையடுத்து இரண்டாவது போட்டியில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணியானது விளையாடியது இதில் நெதர்லாந்து அணியை இலங்கை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முன்னேறியது.
இந்நிலையில் இரண்டு முறை சாம்பியன் மற்றும் எல்லா போட்டிகளிலும் சிறப்பாக செயல்படும் வெஸ்ட் இண்டீஸ் அணியானது இந்த சுற்றில் சுலபமாக தகுதி பெரும் என்ற நிலையில், ஜிம்பாவே மற்றும் நெதர்லாந்து அணிகளிடம் பெரும் தோல்வியை தழுவியது. இதனால் தன்னுடைய முதல் சூப்பர் சிக்ஸ் போட்டியில் வெற்றிபெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி இருந்தது.
இந்நிலையில் தான் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஸ்காட்லாந்திற்க்கு எதிரான முதல் போட்டியானது இன்று நடைபெற்றது. இதில் டாஸை வென்ற ஸ்காட்லாந்து பந்துவீச முடிவு செய்தது. அந்த முடிவு ஸ்காட்லாந்திற்கு சாதகமாக சென்றது. ஏனென்றால் வெஸ்ட் இண்டீஸ் அணியால் ஸ்காட்லாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் ரன்கள் எதுவும் எடுக்காமலே ஆட்டமிழந்தனர்.
ஜான்சன் சார்லஸ் மற்றும் புரூக் ஒரு ரன் கூட எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்கள். அதனையடுத்து வந்த பேட்ஸ்மேன்களினாலும் ஸ்கட்லாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத நிலையில் ஜேசன் ஹோல்டர் மட்டுமே அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 43.5 ஓவர்களில் ஆல் அவுட்டாகி 181 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்நிலையில் இந்த சுலபமான இலக்கை எட்ட களமிறங்கிய ஸ்காட்லாந்து அணியின் கிறிஸ்டோபர் டக் அவுட்டானாலும் திறமையாக விளையாடிய மேத்திவ் கிராஸ் மற்றும் பிரண்டன் மேக்முல்லன் இவருவரும் இணைந்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சாளர்களை பந்தாடி இருவருமே முறையே 74 மற்றும் 69 ரன்களை விளையாசியா நிலையில் அடுத்த வந்த பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 43.3 ஓவர்களில் இலக்கை எட்டி வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது ஸ்காட்லாந்து.
இதனால் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது வரலாற்றில் முதன் முறையாக உலக கோப்பை போட்டிகளில் இருந்து வெளியேறியது. இது பலருக்கும் அதிர்ச்சி கொடுத்த நிலையில் முன்னணி வீரர்கள் பலரும் தங்களுயை கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர.