என்ன இது 2011 உலக்கோப்பை போலவே நடக்கிறது. அப்போ கோப்பை நமக்கு தான்!- ரசிகர்களின் கருத்து.
தற்போது நடக்கும் உலகக் கோப்பை போட்டி 2011 ஆண்டு நடைபெற்றது போல் உள்ளது என்றும் பலர் அவர்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அப்போ கோப்பை இந்தியாவுக்கு தான் என்றும் பலர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட்
தற்போது நடக்கும் உலகக் கோப்பை போட்டி 2011 ஆண்டு நடைபெற்றது போல் உள்ளது என்றும் பலர் அவர்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அப்போ கோப்பை இந்தியாவுக்கு தான் என்றும் பலர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலகின் முன்னனி அணிகள் பங்கேற்று இருக்கிறது.
இந்த முறை உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்று வருவதால் இந்திய ரசிகர்கள் பெரும் உச்சத்தில் இருகின்றனர்.அதில் நேற்று நடந்த போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக செயல் பட்டு நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை வெற்றி பெற்றது. போட்டி ஆரம்பிக்கும் முன்பு வரை யாரும் ஆப்கானிஸ்தான் வெற்றி பெரும் என்று எதிர் பார்த்து இருக்க மாட்டார்கள். ஆனால் பேட்டிங் மற்றும் பௌலிங்ளும் ஆப்கனிஸ்தான் அணி சிறப்பாகவே செயல் பட்டு வெற்றியை பெற்றது. இங்கிலாந்து அணி எதிர்பாராத தோல்வியை தழுவியது.
2011 ஆம் ஆண்டு நடைபெற்றது
2011ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியானது இந்தியாவில் தான் நடைபெற்றது. அப்போது தோனியின் தலைமையிலான இந்திய அணி 28 ஆண்டுகளுக்கு பின்பு அதில் கோப்பையை கைப்பற்றியது. அந்த உலகக்கோப்பையில் முக்கிய சம்பவம் என்றால் அது உலகின் பலமாக அணியாக கருதப்பட்ட இங்கிலாந்து அணி அயர்லாந்து அணியுடம் தோல்வி தழுவிய இந்த தோல்வியை இங்கிலாந்து அணி ரசிகர்கள் கனவில் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
இந்த போட்டியானது பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது இதில் இங்கிலாந்து அணி 300 ரன்களுக்கும் மேல் குவிக்க அதனை அயர்லாந்து அணி யாரும் எதிர் பார்க்காத வகையில் துரத்தி வெற்றி பெற்றது. தற்போது அதே போல இங்கிலாந்து அணி நேற்று நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தானியிடம் தோல்வி தழுவி இருக்கின்றது. மேலும் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை ஆஸ்திரேலியா தங்களுடைய உலக கோப்பை தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி சந்தித்தது.
அதேபோல் தற்போது ஆஸ்திரேலிய அணியும் இரண்டு முறை தொடர்ந்து தோல்வியை தழுவியுள்ளது. இதனால் 2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையையும் 28ஆம் ஆண்டு நடைபபெற்றது போல் இருக்கிறது என்றும் ரசிகர்கள் அவர்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அப்போது கோப்பையை தோனியின் தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது. அதே போல் தற்போது இந்திய அணி 2023 க்கான உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறுகிறது. இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாஇருந்து வருகிறார். இந்திய அணி கோப்பையை வெல்லும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.