தொடரும் தென்னாபிரிக்கா அணியின் 31 வருட சோகங்கள். மீண்டும் ஒரு முறை அரை இறுதியில் தோல்வி.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்பொழுது இந்தியாவில் நடைபெற்று முடிவடையும் கட்டத்தில் உள்ளது அதில் நேற்று முதல் அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியும் இந்திய அணியும் பல பரிட்சை செய்தது அதில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில்
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்பொழுது இந்தியாவில் நடைபெற்று முடிவடையும் கட்டத்தில் உள்ளது அதில் நேற்று முதல் அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியும் இந்திய அணியும் பல பரிட்சை செய்தது அதில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இன்றைய போட்டிக்கான ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் ஆஸ்திரேலியா அணியும் தென் ஆப்பிரிக்கா அணியும் மோதின. இதில் வெற்றி பெறும் அணியானது 19ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் மோதும். இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது அவர்களுக்கு இந்த உலக கோப்பை தொடரில் சேசிங் என்றால் அது சரியாக வரவில்லை. அவர்கள் முதலில் பேட்டிங் செய்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடாத காரனத்தால் தென்னாபிரிக்கா அணியானது 49.4 அவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து து 212 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. அணியின் அதிகபட்சமாக டேவிட் மில்லர் 101 ரன்களையும் கிளாசன் 47 ரன்களையும் கோட்ஸி 19 ரன்களை மட்டுமே அடித்திருந்தனர். ஆஸ்திரேலியா அணியின் சார்பில் ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் தலா மூன்று விக்கேட்டுகளையும் ஹசில்வூட் மற்றும் ஹெட் தலா இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தனர்.
எனவே ஆஸ்திரேலியா அனைத்து தென் ஆப்பிரிக்கா எளிதாக சுருட்டியது. 213 ரன்கள் இலக்காக கொண்டு களம் இறங்கி ஆஸ்திரேலியா அணிக்கு ஆரம்பத்தில் இருந்து சிறந்த அடித்தளம் அமைத்து ஓப்பனார்கள் சிறப்பாக விளையாடினர். எனவே ஆஸ்திரேலியா அணி 47.2 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை மட்டுமே எழுந்த நிலையில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 19ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி அணியை மோத உள்ளது.
ஆஸ்திரேலியா அணியின் அதிகபட்சமாக ஹெட் 62 ரன்களையும் ஸ்மித் 30 ரன்களையும் வார்னர் 29 ரன்களை அடித்து இருந்தனர். எனவே ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் இந்தியா அணியை சந்திக்கவுள்ளது. தென்னாபிரிக்கா அணி 31 வருடங்களாக இதுவரை இறுதி போட்டிக்கு ஒருமுறை கூட செல்ல வில்லை. அரை இறுதி போட்டி வரை சென்று தோல்வியை தழுவி வெளியேறிவிடும். அதே போல் தென்னாபிரிக்கா அணிக்கு மீண்டும் ஒரு முறை நடந்துள்ளது.