world cup ல உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் அதை பயன்படுத்தி கொள்ளமாட்டீர்களா?? இந்திய அணியை விமர்சித்த முன்னாள் இந்திய வீரர் காட்டம்.

உலக கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி இளம் வீரர்களை தயார்படுத்தி வருகிறது அதில் இந்த வருடத்தின் முதல் கட்டமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று T20 தொடர் போட்டிகளை கொண்டது தொடர்களை விளையாடியது. அதில் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது முதல் இரண்டு போட்டிகளில் எளிதாக வெ

By ·

உலக கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி இளம் வீரர்களை தயார்படுத்தி வருகிறது அதில் இந்த வருடத்தின் முதல் கட்டமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று T20 தொடர் போட்டிகளை கொண்டது தொடர்களை விளையாடியது. அதில் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது முதல் இரண்டு போட்டிகளில் எளிதாக வெற்றி பெற்றாலும் நேற்றைய ஆட்டம் ஆனது மிகவும் சுவாரசியமாகவும் விறுவிறுப்புடன் நடைபெற்றது. நேற்றைய முன் தினம் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணி ஆரம்பத்தில் மடமாடவென விக்கெட்டுகளை இழந்தாலும் ரோஹித் ஷர்மா மற்றும் ரிங்கு சிங்கின் சிறப்பான ஆட்டத்தால் 20 அவர்கள் முடிவில் இந்திய அணி 212 ரன்களை அடித்திருந்தது. நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து அதன் பின் 213 ரன்களை இலக்காக் கொண்டு களமிறங்கி ஆப்கானிஸ்தான் அணி 20 அவர்கள் முடிவு 6 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் அடித்து போட்டியை சமம் செய்தது. எனவே அதன் பின் சூப்பர் ஓவர் நடைபெற்று அதிலும் போட்டியானது சமனில் முடிந்தது எனவே இரண்டாவது சூப்பர் ஓவரில் இந்திய அணி அதில் ஆப்கானிஸ்தான் அணியை வெற்றி பெற்று வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணியின் அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 121 ரன்களும் ரின்கு சிங் 69 ரன்களை அடித்து இருந்தது. ஆப்கானிஸ்தான் அணியின் அதிகபட்சமாக குல்பாடின் நைப் 55 ரன்களும் ரஹ்மானுல்லா குர்பாஸ் 50 ரன்களையும் அடித்திருந்தனர். அதில் முதல் சூப்பர் ஓவரில் நிறைய விஷயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.அந்த போட்டியின் சூப்பர் ஓவரில் ஏற்பட்ட சர்ச்சை குறித்து முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில்,

கடைசி பந்தில் ஒரு பவுண்டரி எடுக்கப்பட்டது. சஞ்சு சாம்சன் வீசிய பந்து, நபியின் காலில் பட்டது, அவர்கள் இரண்டு கூடுதல் ரன்கள் எடுத்தனர். ஒன்று கிடைத்தது, இந்தியா ஒன்றைக் கொடுத்தது, ஏனெனில் அவர்கள் விளையாட்டின் உணர்வைப் பற்றி புகார் செய்தனர். இந்தியா புகார் கூறியது தவறு. நீங்கள் அவர்களை இரண்டு ரன்களுக்கு மட்டுப்படுத்தியிருக்கலாம், மேலும் மூன்றாவதாக நீங்கள் அதையே விட்டுக் கொடுத்திருக்கலாம், ”என்று சோப்ரா தனது யூடியூப் சேனலில் கூறினார்.

“எனது கேள்வி என்னவென்றால், இது உலகக் கோப்பை இறுதிப் பந்தாக இருந்திருந்தால், பந்து பேட்களில் பட்ட பிறகு நீங்கள் பெறும் கூடுதல் ரன் போட்டியைத் தீர்மானிக்கும் என்று கருதினால், யாரும் அங்கு ஓட மாட்டார்களா? உலகக் கோப்பையில் அந்த ரன்னை இழக்க யாராவது தயாராக இருப்பார்களா? அந்த ஓட்டத்தை எடுக்காமல் இருப்பதன் மூலம், அது நெறிமுறையில் தவறானது? எல்லோரும் ஓடியிருப்பார்கள்,” என்று சோப்ரா விளக்கினார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை