“ராஜஸ்தான் அணி இந்த முறையும் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்றால் அது அவர்களுக்கு வெட்கக்கேடானது” – முன்னாள் இந்திய வீரர் காட்டம்

ஐபிஎல் போட்டி முதன்முதலாக தொடங்கப்பட்டபோது 2008ஆம் ஆண்டு முதல் முதல் முறை சாம்பியன் பட்டம் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான். அதன் பின் அவர்கள் அதன் பின்னர் ஒருவர் கோப்பையை வெல்ல முடியவில்லை. அதன் பின்னர் அவர்கள் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பிளே ஆப்பிலும் தோல்வியைய

By ·

ஐபிஎல் போட்டி முதன்முதலாக தொடங்கப்பட்டபோது 2008ஆம் ஆண்டு முதல் முதல் முறை சாம்பியன் பட்டம் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான். அதன் பின் அவர்கள் அதன் பின்னர் ஒருவர் கோப்பையை வெல்ல முடியவில்லை. அதன் பின்னர் அவர்கள் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பிளே ஆப்பிலும் தோல்வியையும் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல்லில் பிளே ஆப்பிலும் தோல்வியை தழுவியது. 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் அவர்கள் பிளே ஆப்பில்அவர்கள் வெளியேறினார்கள்.

அதன் பின் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் இறுதிப்போட்டியில் அவர்கள் குஜராத் டைடன்ஸ் அணியை எதிர்கொண்டனர். ஆனால் அந்த போட்டியில் குஜராத் அணி இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது அதன் பின் 2023 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆப்பிற்கு கூட தகுதி பெறவில்லை. இது நல்ல அணி அணியில் மிகப்பெரிய வீரர்களும் இருந்தும் பிளே ஆப்பிற்கு தகுதி பெறவில்லை என்றால் அது வெட்க கேடானது என்றும் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்து இருந்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், இது ஒரு நல்ல அணி, அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனால்தான் இது மிகவும் போட்டி நிறைந்த ஐபிஎல் ஆக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த முறையும் இந்த அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்றால் அது வெட்கக்கேடானது. உங்களிடம் ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருந்தால், சஞ்சு சாம்சன், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக் பேட்டிங் நன்றாக இருந்தால், ரோவ்மன் பவல், ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், ஆடம் ஜம்பா, டிரென்ட் போல்ட் உள்ளனர் ஆனால் அவர்கள் ஒரு நல்ல அணி.

“அவர்களிடமும் அவேஷ் கான் இருக்கிறார். கோப்பையை உயர்த்துவது ஒரு பக்கமா? அவர்களால் அதைச் செய்ய முடியும், இது ஒரு நல்ல அணி, ஆனால் அவர்கள் கோப்பையைத் தூக்குவார்களா இல்லையா என்பது அவர்கள் இம்பாக்ட் பிளேயரைப் பயன்படுத்துவார்களா இல்லையா என்பதைப் பொறுத்தது. இம்பாக்ட் பிளேயரைப் பயன்படுத்த மாட்டோம் என்று அவர்கள் கடைசியாகச் சொன்னபோது, ​​

கிரிக்கெட் 11 பேர் கொண்ட விளையாட்டாக இருந்தது, மேலும் அவர்கள் 11 பேருடன் மட்டுமே விளையாடுவார்கள், அவர்கள் ஆறு பேட்டர்கள் மற்றும் ஐந்து பந்துவீச்சாளர்களுடன் விளையாடுவார்கள், அவர்களுக்கு ஆறாவதும் இல்லை என்றும் அவர் கூறினார். மார்ச் மாதம் 23 ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் போட்டியானது சன்ரைசஸ் ஹைதராபாத் அணியை மார்ச் 24 ஆம் தேதி மோதவுள்ளது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை