மூளை இல்லாத சில இந்திய ரசிகர்கள் செய்த தரங்கெட்ட செயல். இணையத்தில் பரவும் வீடியோ.
பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் சில இந்திய ரசிகர்கள் பங்களதேஷ் ரசிகர்களிடம் அத்துமீறலில் ஈடுபட்ட வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது. உலக ரசிகர்கள் அனைவரும் காத்திருந்த ஒருநாள் உலக கோப்பை 2023 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஏற்கனவே பல அணிகள்
பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் சில இந்திய ரசிகர்கள் பங்களதேஷ் ரசிகர்களிடம் அத்துமீறலில் ஈடுபட்ட வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது. உலக ரசிகர்கள் அனைவரும் காத்திருந்த ஒருநாள் உலக கோப்பை 2023 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஏற்கனவே பல அணிகள் 3 போட்டிகளை விளையாடிய நிலையில் அவர்களின் பலம் எனது பலவீனம் எனது என்பது குறித்து நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த உலக கோப்பையில் தொடர்ந்து மூன்று முறை வென்ற இந்திய அணியானது நேற்று பங்களாதேஷ் அணியை எதிர்கொண்டது.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணியானது பேட்டிங் செய்ய தேர்வு செய்தது. ஆனால் இந்த போட்டியில் கேப்டன் சகீப் அல் ஹாசன் இல்லை. மேலும் கடந்த சில போட்டிளில் பங்களாதேஷ் அணியானது கொஞ்சம் தடுமாறி வருகிறது. சொல்லப்போனால் முதல் போட்டியை தவிர பங்களாதேஷ் அணியானது 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. இதனால் இந்த போட்டியை வென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் பங்களாதேஷ் அணி இருக்கிறது.
இந்நிலையில் முதல் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி தொடக்கத்தில் கொஞ்சம் தடுமாறினாலும், பின்னர் அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். பங்களாதேஷ் அதிகபட்சமாக ரிட்டன் தாஸ் 66 ரன்களும், ஹாசன் 51 ரன்களும், மஹ்மத்துல்லா 46 ரன்களும் எடுத்தனர் இறுதியில் பங்களாதேஷ் அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து 256 ரன்களை குவித்தது. இந்திய அணியின் சார்பில் பும்ரா, சிராஜ், ரவீந்திர ஜடேஜா தலா இரண்டு விக்கெட்களையும் தாகூர்,குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டுகளையும் விழித்தனர்.
இந்த ஸ்கோர் இந்தியா அணிக்கு சற்று சவாலான ஸ்கோராக தான் இருக்கின்றது.257 ரன்களை இலக்காகக் கொண்டு களம் இறங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் நல்ல தொடக்கத்தை கொடுத்து 4 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 28 ரன்களை குவித்துள்ளது. இறுதியில் இந்திய விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் சார்பில் அதிக பட்சமாக கோலி 103 ரன்களும்,கில் 53 ரன்களும், ரோஹித் ஷர்மா 48 ரன்களும் குவித்தனர். இறுதியில் விராட் கோலி சிக்சரின் மூலம் இந்திய அணி வெற்றியை கண்டது. அப்போது மைதானத்தில் சில ரசிகர்கள் பங்களாதேஷ் ரசிகர்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.
Shoaib Ali, Bangladesh's superfan, fondly known as 'Tiger Shoaib' has faced harassing behavior from the Indian fans in the India vs Bangladesh match in Pune
— bdcrictime.com (@BDCricTime) October 21, 2023
Look how his Tiger Mascot had been torn apart by the Indian fans!
It's not acceptable from the HOME crowd#INDvBAN… pic.twitter.com/XFdIo6beav
அங்கு நடந்தது:
புனேவில் நடந்த இந்தியாவுக்கும் வங்காளதேசத்துக்கும் இடையிலான போட்டியில் ‘டைகர் ஷோயப்’ என்று செல்லமாக அழைக்கப்படும் பங்களாதேஷின் சூப்பர் ரசிகரான ஷோயப் அலி, இந்திய ரசிகர்கள் அதை கிழித்து தொங்கவிட்டனர். இது அவரது புலி சின்னம் இந்திய ரசிகர்களால் எப்படி கிழிக்கப்பட்டது என்று பாருங்கள். இது போல் சில மூளை இல்லாத இந்திய ரசிகர்களால் மற்ற இந்திய ரசிகர்களுக்கு அவமானம் ஏற்படுகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.