ஒரு WIDE REVIEW கூட கொடுக்க தெரியாத மூன்றாம் நடுவர். AC அறையில் அமர்ந்து கொண்டு மூன்றாம் நடுவர் செய்யும் தில்லு முள்ளு… ஆத்திரத்தில் கில்.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 அன்று முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்று 24வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஜெய்பூரில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 அன்று முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்று 24வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஜெய்பூரில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் அணிஇதற்க்கு முன்பு நடைபெற்ற அனைத்து போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வருகிறது. ஆனால் குஜராத் அணி ஐந்து போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் கில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதுவே அவருக்கு பாதகமாக அமைந்தது. ஆரம்பத்தில் சில ஓவர்களில் மட்டும் தான் குஜராத் அணிக்கு சிறப்பான ஓவராக அமைந்தது. அதன் பின் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் குஜராத் அணியின் பந்து வீச்சை நான்கு பக்கமும் சிதறடித்து இருந்தனர். இடையில் கேப்டன் சஞ்சு சாம்சனுடன் இணைந்த ரியான் பராக் தனது அதிரடி பாணியை இந்த போட்டியில் அவர் அதை தொடர்ந்து இருந்தார்.

20வது ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 196 ரன்களை அடித்து இருந்தனர். ஆரம்பத்தில் ஜெய்ஸ்வால் 24 ரன்களிலும் பட்லர் 8 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினாலும் அதன் பின் சஞ்சு சாம்சனுடன் இணைந்து ரியான் பாராக் அதிரடியை காட்ட தொடங்கினார். ரியான் பராக் 48 பந்துகளில் 76 ரன்களையும் சஞ்சு சாம்சன் 38 பந்துகளில் 68 ரன்களையும் அடித்து இருந்தனர். போட்டியின் இடையில் 180ரன்களே வருமா என்ற கேள்வி இருந்தது. ஆனால் அதன் பின் வந்த ஹெட்மெயிர் 5 பந்துகளில் 13 ரன்களை அவர் அடித்து இருந்தார் . எனவே தான் ராஜஸ்தான் அணி 196 ரன்களை அடித்து குவித்து இருந்தது.

இந்த போட்டியின் இடையில் மூன்றாம் நடுவர் கொடுத்த ஒரு முடிவு தான் தற்போது இணையத்தில் சர்ச்சையை கிளப்பி உள்ளது. 16.5 ஓவரில் மோஹிட் ஷர்மா வீசிய பந்திற்கு மைதானத்தில் இருந்த நடுவர் WIDE என அறிவித்தார். அதனை எதிர்த்து குஜராத் அணியின் கேப்டன் கில் DRS எடுத்து இருந்தார். அப்போது மூன்றாம் நடுவர் அதனை முதலில் பார்த்து இது சரியான பந்து தான் என்று கூறினார். அதன் பின் மைதான நடுவரிடம் நீங்கள் கூறியது சரிதான் என்று கூறவே நடுவருக்கு குழப்பம் ஏற்பட்டது. அது WIDE ஆ இல்லை சரியான பந்தா என்று.

எனவே மைதான நடுவர் மூன்றாம் நடுவரிடம் மீண்டும் என்ன வென்று கேட்டார். எனவே மூன்றாம் நடுவர் மீண்டும் அதை சரி பார்த்து அது WIDE தான் என்று சில வினாடிகளில் அவரது முடிவை மாற்றிகொண்டார். மூன்றாம் நடுவர் மைதானத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் அறையில் அமர்ந்து கொண்டு அவரது விருப்பத்திற்கு ஏற்ப அவரது முடிவுகளை வழங்கி வருகிறார். இந்த நிகழ்வை பார்த்த பின் கில் மைதான நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மழையின் காரணமாக போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குஜராத் அணி 10 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 77 ரன்களில் இருந்து வருகிறது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை