கிடைத்த வாய்ப்புகளில் அடுத்தடுத்து சொதப்பும் கேப்டன். கிடைத்த வாய்ப்புகளில் அடுத்தடுத்து கலக்கும் இளம் வீரர்.

இந்திய அணி இந்த வருடம் அமேரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெறும் உலகக்கோப்பை 2024க்காக இளம் வீரர்களை தயார் படுத்தி வருகிறது. அதற்க்கு முதற்கட்டமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 T20 தொடர்களை இந்தியாவில் விளையாட உள்ளது. அதில் இன்றுஇரண்டாவது போட்டி இந்தூர் நடைபெற்றது. இந்

By ·

இந்திய அணி இந்த வருடம் அமேரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெறும் உலகக்கோப்பை 2024க்காக இளம் வீரர்களை தயார் படுத்தி வருகிறது. அதற்க்கு முதற்கட்டமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 T20 தொடர்களை இந்தியாவில் விளையாட உள்ளது. அதில் இன்றுஇரண்டாவது போட்டி இந்தூர் நடைபெற்றது. இந்த தொடருக்கு இந்திய அணியின் முன்னனி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா 14 மாதங்களுக்கு பின் T20 இந்திய அணியில் அவர் இணைந்துள்ளார்.

இந்த தொடரில் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக வெளியேறிய நிலையில் இந்த தொடரில் ரோஹித் ஷர்மா இந்திய அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியை இந்திய அணி வென்று இருந்தது. அதன் பின் இந்திய அணி இரண்டாவது போட்டியை இன்று விளையாடி இருந்தது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பௌலிங்கை தேர்வு செய்து இருந்தார்.

ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை மட்டுமே அடித்து இருந்தார்கள். அதில் அதிகபட்சமாக குல்பாடின் 57 ரன்களையும் நஜிபுல்லா 23 ரன்களையும் மற்றும் முஜீப் 21 ரன்களை மட்டுமே அடித்து இருந்தனர். இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும் ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளையும் அக்சர் பட்டேல் 2 விக்கெட்டுகளையும் ஷிவம் துபே 1 விக்கெட்டையும் அவர் வீழ்த்தி இருந்தனர்.

அதன் பின் 173 ரன்களை இலக்காகக்கொண்டு களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்தில் பெரும் அடியாக விழந்தது கேப்டன் ரோஹித் ஷர்மாவின் ஆட்டமிழப்பு தான். இந்திய அணி 5 ரன்களை இருக்கும் போது கேப்டன் ரோஹித் ஷர்மா முதல் பதில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் ஜெய்ஸ்வால் ஷிவம் துபே மற்றும் விராட் கோழியின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதில் இந்திய அணியின் அதிகபட்சமாக ஷிவம் துபே 63 ரன்களும் ஜெயஸ்வால் ரன்களும் விராட் கோலி ரன்களையும் அடித்து இருந்தனர். ஆப்கானிஸ்தான் அணி சார்பில் கரீம் ஜனத் 2 விக்கெட்டுகளையும், நவீன்-உல்-ஹக் மற்றும் ஃபசல்ஹாக் ஃபாரூக்கி தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். ஷிவம் துபே தனக்கு கிடைத்த அற்புதமான வாய்ப்புகளை அவர் சிறப்பாகவே பயன்படுத்தி வருகிறார். முதல் போட்டியில் 60 ரன்களும் இந்த போட்டியில் 63 அடித்து கிடைத்த வாய்ப்புகளையும் அவர் சிறப்பாக பயன்படுத்திக்கொண்டார்.

என்னதான் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தாலும் கேப்டன் ரோஹித் ஷர்மா அடுத்தடுத்து இரண்டு போட்டிகளிலும் ஒரு ரன் கூட அடிக்காமல் ஏமாற்றியே வருகிறார். ஆனால் மற்றொரு பக்கம் துபே சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் ரன்களை அடிப்பது மட்டுமல்லாமல் பந்து வீச்சிலும் அவர் அவரால் முடிந்ததை செய்து வருகிறார். இரண்டு போட்டிகளையும் சேர்த்து அவர் இரண்டு வவிக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை