அஷ்வின் வேண்டாம்..அபப்டி மாடிப்பிங்க – இந்திய அணியின் முன்னாள் வீரர் கருத்து.
உலக கோப்பை 2023 தொடரானது தற்போது சுவாரசிய கட்டத்தை எட்டியுள்ளது. அணைத்து அணிகளும் புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் வருவதற்காக கடுமையாக உழைத்து வருகின்றனர். இருட்னஹா போதிலும் பல அணிகள் ஏற்கனவே 5 போட்டிகளை ஆடியுள்ள நிலையில் கிட்டத்தட்ட சில அணிகள் அரையிறுதி போட்டிக்கு செல்லவும் வாய்ப
உலக கோப்பை 2023 தொடரானது தற்போது சுவாரசிய கட்டத்தை எட்டியுள்ளது. அணைத்து அணிகளும் புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் வருவதற்காக கடுமையாக உழைத்து வருகின்றனர். இருட்னஹா போதிலும் பல அணிகள் ஏற்கனவே 5 போட்டிகளை ஆடியுள்ள நிலையில் கிட்டத்தட்ட சில அணிகள் அரையிறுதி போட்டிக்கு செல்லவும் வாய்ப்பை பெற்றுவிட்டனர். அதில் இந்திய அணி ஏற்கனவே நடந்த 5 போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருந்து வருகிறது.
இருந்த போதிலும் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக ஓய்வு எடுக்கும் நிலையில் அவருக்கு பதிலாக யார் களமிறங்குவார் என்ற கருத்து நிலவி வருகிறது. கடந்த போட்டியில் ஷமி களமிறங்கிய நிலையில் இங்கிலாத்திற்கு எதிரான போட்டியில் ஸ்பின்னர்களை களமிறக்குவார்கள் என்று எதிபார்க்கப்படுகிறது. அந்த நிலையில் தான் இது குறித்து பேசியுள்ளார் ஆகாஷ் சோப்ரா.
அவர் கூறுகையில் ” இங்கிலாந்தது அணியை எதிர்கொள்வதினால் ஆஃப் ஸ்பின்னரை விளையாடுவோம் என்று நீங்கள் சொல்கிறீர்கள், நீங்கள் லக்னோ மைதானத்தைப் பார்க்கும்போது அது பெரிய மைதானம் என்பதினால் ஒரு ஆஃப் ஸ்பின்னரை விளையாடுவோம் என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஐபிஎல் போட்டியின் போது பார்த்த விக்கெட் என்று பந்து ஒரு திருப்பமாக மாறியது என ஆஃப்-ஸ்பின்னர்களுடன் விளையாடுவோம் என்று செல்கிறீர்கள். ஆனால் இது ஐபிஎல்லில் இருந்த விக்கெட் கிடையாது.
இது ஐபிஎல்-ல் இருந்த கருப்பு-மண் ஆடுகளம் அல்ல. இது இப்போது பவுன்ஸ் மற்றும் வேகம் கொண்ட சிவப்பு-மண் ஆடுகளமாக உள்ளது. டியூவும் பின்னர் வருகிறது. நீங்கள் இரண்டாவது கட்டத்தின் போது சுழற்பந்து வீச்சாளர்களை இறங்கினால் அப்போது உங்களிடம் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பார்கள், பந்து ஈரமாகிவிடும். இதனால் எதிரணியின் கைகளில் நீங்கள் சிக்கிக்கொள்ள நேரிடும் என்றார்.
முதலில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை விளையாடுவது என்ற எண்ணத்துடன் செல்லக்கூடாது என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் பனி பிரச்சினை எப்போதும் உள்ளது மற்றும் கருப்பு மண் ஆடுகளத்தில் இதுவரை எந்த போட்டியும் விளையாடப்படவில்லை. இருப்பினும் அவர்கள் அஷ்வினை விளையாடினால், இடையில் சிராஜ் மற்றும் முகமது ஷமி விளையாட வேண்டும் ஏனென்றால் அவர் சிறப்பாக பந்து வீசுகிறார்.
கடந்த போட்டியில் சிராஜ் சிறப்பாக பந்து வீசினார் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் ஷமி தான் விளையாடிய ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதனால் ஃபார்ம் அடிப்படையில் சமியுடன் செல்வேன். என்றார் ஆகாஷ் சோப்ரா.