இந்திய அணி என்பது வாடகை வீடு..நிரந்தரமாக இருக்க முடியாது – சுப்மன் கில்லை எச்சரித்த ஆகாஷ் சோப்ரா.
உலக கோப்பை 2023 தொடரானது இன்னமும் 2 மாதத்தில் தொடங்க இருக்கிறது. இதனால் இந்தியா இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து சோதிக்கும் அதே நேரத்தில் , மூத்த வீரர்களுக்கும் ஓய்வு கொடுக்கும் நேரமாகவும் தற்போது நடக்கும் போட்டிகளை பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது மேற்கிந்திய தீவுகளு
உலக கோப்பை 2023 தொடரானது இன்னமும் 2 மாதத்தில் தொடங்க இருக்கிறது. இதனால் இந்தியா இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து சோதிக்கும் அதே நேரத்தில் , மூத்த வீரர்களுக்கும் ஓய்வு கொடுக்கும் நேரமாகவும் தற்போது நடக்கும் போட்டிகளை பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் இந்தியா தற்போது விளையாடி வருகிறது. இதில் ஐபிஎல் போட்டியில் அதிரடி காட்டிய சுப்மன் கில்லிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால் இந்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் டெஸ்ட் தொடரில் மோசமாக சொதப்பிய சுப்மன் கில் ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடினார், ஆனால் அதற்கு பிறகு நடந்த இரண்டு டி20 தொடரிலும் மோசமாக விளையாடி விக்கெட்டை பறிகொடுத்தார். மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த உலக சாம்பியன் ஷிப் போட்டியில் கூட அவர் மோசமாக விளையாடியது விமர்சனத்திற்கு உள்ளன நிலையில்தான், சுப்மன் கில் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.
அவர் கூறுகையில் “சுப்மன் கில் ரன் எடுக்க வேண்டும். அவர் ஐபிஎல்லில் மிகச் சிறப்பாக விளையாடினார், ஆனால் இங்கே அவர் பிரச்சினையை அதிகமாக இருப்பது போல தெரிகிறது. அவர் ஒவ்வொரு பந்து வீச்சிலும் ஒரு பெரிய ஷாட்டை ஆட முயற்சிக்கிறார், ஆனால் அது நமக்குத் தெரிந்த சுப்மான் கில் போல கிடையாது. இந்திய அணி என்பது உங்களுக்கு வாடகை வீடு போன்றது. அதை நீங்கள் வாங்கவில்லை என்பதை நியாபகம் வைத்து கொள்ளுங்கள்.
நான்கு அல்லது ஐந்து போட்டிகளில் வாடகை தரவில்லை என்றால் வீட்டை காலி செய்து செல்ல வேண்டியதுதான். எல்லோருக்கும் அவ்வளவு தான் வாய்ப்பு கிடைக்கும். ஒரு வீரர் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அவருக்கு அடுத்த ஆறு மாதங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். சுப்மான் கில் அந்த மாதிரியான சூழ்நிலையில் தான் இருக்கிறார். ஆனால் அது போன்று நிரந்தரமாக இருக்க முடியாது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாட வேண்டுமா? என்பது ஆசையை தூண்டும் ஒரு கேள்வியாகும். அவரை இஷான் கிஷானுக்கு பதிலாக அப்படியே இடமாற்றம் செய்ய முடியும். இடது கை கிரிக்கெட் வீரருக்கு இடது கை வீரர் என்று மாற்றலாம். இஷான் கிஷானின் கடைசி 10 முதல் 12 போட்டிகளைப் பார்த்தால், அவரது ஆட்டம் என்பது சொல்லும் அவ்வளவு சிறப்பாக இல்லை என்பதை நம்மால் காண முடியும்.
இருப்பினும் நீங்கள் அவரை முதல் போட்டியில் விளையாடியிருந்தால், குறைந்தது மூன்று முறையாவது தொடர்ந்து விளையாட வையுங்கள். அதன் பிறகு அவருடைய விளையாடு என்பது சரியாக நடக்கவில்லை என்றால் அவரை வரிசையின் பின்புறத்தில் நிற்க வைக்கவும். சிலர் இரண்டு போட்டிகள் போதும் என்று கூறுவார்கள் ஆனால் மூன்று போட்டிகள் கொடுக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்றார் ஆகாஷ் சோப்ரா.