எனக்கும் பணம் தான் முக்கியம்..லீக் போட்டிகள் விளையாட இனி இதனை செய்வார்கள் – ஓய்வுபெற்ற வீரர் குறித்து ஆகாஷ் சோப்ரா ஓபன் டாக்.
டி20 போட்டிகள் வந்ததில் இருந்து கிரிக்கெட் போட்டியானது பெருமளவு உலக ரசிங்கர்கள் இடையே பிரபலமாகியுள்ளது. ஏனென்றால் குறைவான நேரத்தில் அதிக உற்சாகத்தை தருவத்தினால் டி20 போட்டிகளானது கிரிக்கெட் போட்டியே தெரியாதா நாடுகளிலும் கூட தற்போது லீக் போட்டிகளாக அறிமுகமாகியுள்ளது. மேலும் எதிர்க
டி20 போட்டிகள் வந்ததில் இருந்து கிரிக்கெட் போட்டியானது பெருமளவு உலக ரசிங்கர்கள் இடையே பிரபலமாகியுள்ளது. ஏனென்றால் குறைவான நேரத்தில் அதிக உற்சாகத்தை தருவத்தினால் டி20 போட்டிகளானது கிரிக்கெட் போட்டியே தெரியாதா நாடுகளிலும் கூட தற்போது லீக் போட்டிகளாக அறிமுகமாகியுள்ளது. மேலும் எதிர்காலத்தில் இந்த போட்டிகளை மிகப்பெரிய அளவு வளரும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.
மேலும் இந்த டி20 கிரிக்கெட்டை தொழிலாக நடத்தவும் பல இளைனர்கள் பயமில்லாமல் வருகின்ற்றனர். ஆனால் இது ஒரு பாதகமான விஷயமும் இருக்கிறது. அதாவது இந்த மாதிரியான லீக் போட்டிகளில் சர்வதேச போட்டிகளுக்கு இவருக்கும் பிரபலம் குறைந்து விடுகிறது. மேலும் லீக் போட்டிகளில் அதிக பணம் வருவதால் பல வீர்ரகள் தங்களுடைய நாட்டிற்காக விளையாடுவதை விட்டு இதில் விளையாட துவங்கி விட்டனர்.
இந்நிலையில் தான் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரரான அலெக்ஸ் ஹேலஸ் சர்வதேச போட்டிங்களில் இருக்கு 34 வயதிலேயே ஓய்வை அறிவித்துள்ளார். இவர் கடந்த 2022ஆம் ஆண்டு நடந்ந்த டி20 போட்டியில் இங்கிலாந்து கோப்பையை வெல்லும் பொது இருந்தார். மேலும் ஒருவேலை இவருக்கும் வருகின்ற்றனர் 2023 ஒருநாள் உலக கோப்பையில் கிடைக்கவில்லை என்றாலும் கூட அடுத்த ஆண்டு நடக்கும் 2024 டி20 உலக கோப்பையில் வாய்ப்பு இருக்கும் நிலையில் இவர் இப்படி செய்திருப்பது பலருக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
இந்த நிலையில் தான் இது குறித்து பேசியுள்ளார் ஆகாஷ் சோப்ரா “இது இன்னும் சீக்கிரமா அறிவிக்கப்பட்ட முடிவா என்று எனக்கு தெரியவில்லை? 34 வயது என்பது இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும் என்று நீங்கள் நினைக்கும் வயது. அவர் ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடாவிட்டாலும், அடுத்த டி20 உலகிற்கு அவர் வலுவான வேட்பாளராக இருந்திருக்கலாம். இருப்பினும், அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு லீக் கிரிக்கெட்டில் விளையாடி நிறைய பணம் சம்பாதிக்க விரும்புவதாக அவர் கூறினார்.
ஏனெனில் அவர் ஏற்கனவே உலகக் கோப்பையை வென்றுள்ளார், மேலும் எதையும் சாதிக்கும் கனவு இல்லை. இதனால் அவர் பணம் சம்பாதிப்பதில் எந்த தவறும் கிடையாது. ஓன்று மட்டும் நிச்சயம் உங்களுக்கு இப்போது எல்லா இடங்களிலும் லீக் இருப்பதால், தொடர்ந்து வளர்ந்து வரும் இந்த நிகழ்வு மேலும் வளரும். உங்களுக்கு அமெரிக்காவில் MLC, T10 உள்ளது, பிறகு Zim Afro, ILT20, CPL, BBL, PSL, IPL, SA20 – பல லீக்குகள் உள்ளன.
இப்படி ஏராளமான விரும்புங்கள் உங்களிடம் இருப்பதினால் நீங்கள் அதனை தேர்வு செய்து கொள்ளலாம். உங்களிடம் பல லீக்குகள் இருக்கும்போது, வருடம் முழுவதும் பிஸியாக இருக்க வாய்ப்பு உள்ளது. ஒரு கிரிக்கெட் வீரராக நீங்கள் கிரிக்கெட் விளையாட விரும்புகிறீர்கள், அங்கேயும் அதைத்தான் செய்கிறீர்கள். மேலும் எனக்கு ஏ அணி பி அணியை விட அதிக சம்பளம் கொடுக்கிறது என்றால் நான் எ அணியுடன் செல்லவே விரும்புவேன். அதனால் இந்த விஷயம் தவறு கிடையாது.