சென்னை அணிக்கு இந்த விஷயம் அலர்ஜி போல.. பஞ்சாப் இன்னும் இருக்கு – முன்னாள் வீரர் அதிரடி கருத்து.
உலகக் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த ஐபிஏல் 2024 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்று 49 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பலபரீட்சை செய்தது. இதில் டாஸ் வென்ற பஞ
உலகக் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த ஐபிஏல் 2024 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்று 49 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பலபரீட்சை செய்தது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இருந்தார். அது அவர்களுக்கு சிறப்பாக அமைந்தது
சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சொதப்பி வந்தனர். அந்த வகை சொதப்பலுக்கு காரணம் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தான். பேட்ஸ்மேன்களின் வரிசைகளை மாற்றி மாற்றி அனுப்பி அணியை குழப்பி சிக்கலில் தள்ளிவிட்டார். இருப்பினும் அவர் நிதானமாக விளையாடி அணிக்கு சற்று அணிக்கு ரன்களை குவித்து வந்தார். அவரும் சற்று பொறுமையாக தான் ரன்களை சேர்த்து வந்தார். சென்னை அணியின் தோல்விக்கு அதுவும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
அவர் கூறுகையில் : முதல் ஆறு ஓவர்களில் ஸ்பின் போடமாட்டார்கள், பந்து பணியில் வரை ஸ்பின்னருக்கு பந்து வீச ஓவர் கொடுக்க மாட்டார்கள் என்று சென்னைக்கு லேசான அலர்ஜி. அதே கதைதான். இரண்டு பந்துகளில் தீபக் சாஹர் காயமடைந்தார். அதன் பிறகு ஷர்துல் தாகூர் வந்து ரிச்சர்ட் க்ளீசன் ஒரு விக்கெட்டை எடுத்தார்.
பின்னர் ஸ்பின் வந்தது. ஜானி பேர்ஸ்டோவும், ரிலீ ரோசோவும் அதுவரை நன்றாக விளையாடிக்கொண்டிருந்தனர். பிரப்சிம்ரன் சிங் அவுட்டானார். அதன்பிறகு நேர்மையாகச் சொல்ல வேண்டும் என்றால் சென்னை அணி பிடிக்க முடியாத நிழலை துரத்துவது போல இருந்தது. பின்னர் சிவம் துவே 1 விக்கெட்டை எடுத்திருந்தாலும் 14 ரன்கள் விட்டுக்கொடுக்க முடியாது. அதனால் அவர் மீண்டும் பந்து வீசவில்லை.
ஜானி போர்ஸ்டோவ் ஆட்டமிழந்த பிறகு என்ன நடக்கிறதோ அது நடந்து கொண்டு தான் இருந்தது. அதனால் விஷயங்கள் பெரிதாக மாறப்போவதில்லை. முடிவில் பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. சாம் கரண் மற்றும் ஷஷாங்க் சிங் ஆகியோர் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஒட்டுமொத்தமாக ஒரு சிறந்த ஆட்டத்தை விளையாடினர். கடைசி ஆட்டம் அதிக ஸ்கோராக இருந்தது என்றார் ஆகாஷ் சோப்ரா