சதம் அடிக்கலைனாலும் ரசிகர்களின் மனச புடிச்சுட்டாரு – தினேஷ் கார்த்திக் குறித்து முன்னாள் வீரர்.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக தொடங்கி பெற்று வருகிறது. அதில் நேற்று 30வது போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பெங்களூரில் உள்ள சின்ன சாமி மைதானத்த
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக தொடங்கி பெற்று வருகிறது. அதில் நேற்று 30வது போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பெங்களூரில் உள்ள சின்ன சாமி மைதானத்தில் மோதியது. பெங்களூரு அணி இதற்கு முன்பு நடந்த போட்டியில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது. இந்த போட்டியும் அந்த வகை போட்டியில் ஒன்றாக மாறியது.
இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளசிஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன் பின் தான் அவருக்கு தெரிந்தது இது முற்றிலும் தவறான முடிவு என்று. ஆரம்பத்தில் இருந்தே ஹைதராபத் அணியின் வீரர்கள் தங்களது அதிரடியை கட்டி ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றையும் படைத்து இருந்தனர். அதாவது 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 287 ரன்களை குவித்து புதிய சாதனை ஒன்றை படைத்தது.
பின்னர் இந்த இமாலய இலக்கை துரத்திய பெங்களூரு அணி சிறப்பாக தொடங்கினாலு ஒரு கட்டத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். அவர் 35 பந்துகளில் 84 ரன்களை அடித்து பெங்களூரு அணிக்கு தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருந்தாலும் மக்களின் மனதை தினேஷ் கார்த்திக் வென்றுவிட்டார்.
இந்நிலையில் இது குறித்து பேசிய முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில் :லாஜிக்கான பார்த்தல் 287 ரன்கள் என்பது துரத்தப்பட கூடிய ரன்கள் இல்லை. ஆனால் ஆரசிபி அணியின் அடிக்க தொடங்கியது. விராட் கோலி அதைத் தொடங்கினார். நல்ல பந்துகள் பவுண்டரிகளுக்கும், மோசமான பந்துகள் சிக்ஸருக்கும் சென்றது. இருப்பினும், அவர் மயங்க் மார்கண்டேவிடம் அவுட் ஆனார். அதன் பிறகு, ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் அவர் வீட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து பவுண்ட்டரிகளையும் சிக்ஸர்களையும் அடித்தார்.
வில் ஜாக்ஸ் துரதிர்ஷ்டவசமாக நான்-ஸ்ட்ரைக்கர் முடிவில் ரன் அவுட் ஆனார். ரஜத் படிதார் அவுட் ஆனார். மஹிபால் லோம்ரோர் ஆர்சிபி அணிக்காக கொஞ்சம் அடித்தார். பின்னர் தினேஷ் கார்த்திக் வந்தார். அவர் வித்தியாசமாக செயல்படுகிறார். அவர் விளையாடிய ஷாட்கள் கிரிக்கெட் அல்ல. அவர் லகானில் இருந்து குரான் போல் நின்று இரண்டு பக்கங்களிலும் ஷாட்களை ஆடுகிறார்.”
ஐபிஎல் டி20 சதம் அடித்த 6வது அல்லது அதற்கும் குறைவான இடத்தில் பேட் செய்யும் முதல் பேட்டர் என்ற பெருமையை தினேஷ் கார்த்திக் பெறுவார் என்று நான் நினைத்தேன். ஆனால அவரினால் சதம் அடிக்க முடியவில்லை. ஆனால் தினேஷ் கார்த்திக் ரசிகர்களின் இதயங்களை வென்றார். அவர்களின் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையேயான வித்தியாசம் இறுதியில் 25 ரன்கள் மட்டுமே இருந்தது என்றார் சோப்ரா.