பாஸ்கிதானுக்கு எதிராக இவர் வேண்டாம்.. எந்த பயனும் இல்லை – முன்னாள் வீரர் அதிரடி கருத்து.

உலக கோப்பை தொடரானது சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த போட்டியில் இந்திய அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து நேற்று நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா மிகவும் சுலபமாகவே வெற்றி பெற்றது. இந்நிலையில்

By ·

உலக கோப்பை தொடரானது சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த போட்டியில் இந்திய அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து நேற்று நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா மிகவும் சுலபமாகவே வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இல்லை, அவருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் வந்திருந்தார்.

அவர் விக்கெட் எடுத்தாலும் அதிக ரன்களை விட்டுக்கொடுப்பதினால் எதிரணிக்கு விக்கெட்டின் அழுத்தத்தை கொடுக்க முடியாமல் போகிறது. இதனால் விக்கெட் எடுத்தும் அதற்கு பலனில்லாமல் போகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக அஸ்வினை அணியில் இருந்து நீக்கினால் அவருக்கு பதிலாக முகமது ஷமிக்கு வாய்ப்பு தரவேண்டும் என்று பல முன்னால் வீரர்கள் கூறினார். ஆனால் நேற்று நடந்த போட்டியில் ஷர்துல் தாகூர் தான் களமிறங்கினார்.

இந்த நிலையில் தான் இது குறித்து பேசியுள்ளார் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா. அவர் கூறுகையில் ” ஷர்துல் தாக்கூர் அல்லது முகமது ஷமி விளையாட வேண்டுமா என்பது பற்றி எப்போதும் விவாதம் உள்ளது. அணி ஷர்துலை நோக்கி சென்றது. எனக்கு ஷமி வேண்டும் என்று நாங்கள் விவாதித்தோம், ஆனால் அணி ஷர்துலை விளையாடும், ஏனெனில் அவர்கள் அவரிடமிருந்து 8-வது இடத்தில் பேட்டிங் செய்வார் என்பதினால்

உங்கள் நம்பர் 8 களமிறங்கி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பேட்டிங் செய்ய ஆள் தேவை படமாட்டார். அப்படி தேவைப்படும் போது வேறு யாராவது அந்த பெரிய ஷாட்களை விளையாடலாம் அவர்கள் அப்படி செய்யாவிட்டால் தோற்ற பிறகு நீங்கள் சொல்லலாம் – ‘நன்றாக விளையாடினார் என்று, எனவே அப்படி ஒரு பேட்டிங் வரப்போவதில்லை. பாகிஸ்தானுக்கு எதிராகவும் ஷமி விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

ஷர்துல் பேட்டிங் செய்யும் நிலையில் அவர் ஒரு பந்துவீச்சாளர். மேலும் 20 பந்துகளில் 45 ரன்கள் எடுப்பார் என்பது அல்ல. அவர் அப்படிப்பட்ட வீரர் அல்ல. அவர் அப்படி விளையாடுவதில்லை. அணிக்கு ஒரு தேவை. நம்பர் 8 இல் சிறிய பேட்டிங் ஆழம், கொஞ்சம் காப்பீடு மற்றும் உத்தரவாதம் அதனால்தான் ஷர்துல் இருக்கிறார், ஆனால் அந்த இடத்தில் முகமது ஷமி இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்றார் ஆகாஷ் சோப்ரா.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை