மும்பை vs டெல்லி போட்டியில் அசத்தப்போவது யார்? வெல்லுமா மும்பை.. கணித்த முன்னாள் இந்திய வீரர்.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த ஐபிஎல் மார்ச் 33 முதல் இந்தியாவில் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சனிக்கிழமை என்பதினால் இரண்டு போட்டிகள் நடக்கிறது. முதல் போட்டியாக மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. இந

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த ஐபிஎல் மார்ச் 33 முதல் இந்தியாவில் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சனிக்கிழமை என்பதினால் இரண்டு போட்டிகள் நடக்கிறது. முதல் போட்டியாக மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி டெல்லி அணிக்கு மட்டுமல்லாமல் மும்பை அணிக்கும் முக்கியமான போட்டி என்பதினால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் டெல்லி அணி 8 புள்ளிகளுடன் வது இடத்திலும் மும்பை அணி புள்ளிகளுடன் 9வது இடத்திலும் இருப்பதினால் இந்த போட்டி மும்பை அணிக்கு மிகவும் முக்கியமானது. அதே வேலையில் இந்த போட்டியானது டெல்லி மைதானத்தில் நடப்பதினால் டெல்லி அணிக்கு சாதகமாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் இந்த போட்டியில் மும்பை அணியின் அசத்தப்போகும் முக்கிய வீரர்கள் குறித்து பேசியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா.

அவர் கூறியதாவது : இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடுவார் என்று நினைக்கிறன். ரோஹித் சர்மா இந்த மைதானத்தில் மூன்று அரைசதங்கள் அடித்துள்ளார். டெல்லியில் ரோஹித் சர்மா சிறப்பான சாதனை படைத்துள்ளார், அவர் அந்த சாதனையுடன் வருகிறார் என்றால் மதியம் ஆட்டம் கடைசி போட்டியிலும் நன்றாக விளையாடினார். இந்த ஆட்டமும் மதியம் என்பதினால் ரோஹித் சர்மா அசத்துவார் என்று நம்புகிறேன்.

ரோஹித் சர்மா நன்றாக பேட் செய்கிறார். கடந்த போட்டியில் அரிதான தோல்வியின் காரணமாக மனதளவில் சிறிது காயம் அடைந்திருப்பார் என்று நினைக்கிறன். அவர் அதிலிருந்து மீண்டு வருவார் என்று நம்புகிறேன். இந்த மைதானத்தில் எப்படியிருந்தாலும் அவர் அதைச் செய்வார்.

நான் தேர்வு செய்யும் இரண்டாவது வீரர் சூர்யகுமார் யாதவ். ஒற்றைப்படை நாட்களில் ரன் குவித்தும், இரட்டை படை நாட்களில் அவுட் ஆகியும் நான் பார்த்திருக்கிறேன். கடந்த போட்டியில் அவர் அவுட் ஆனதால், இந்தப் போட்டியில் அவரிடமிருந்து ரன்களை எதிர்பார்க்கலாம். எனவே ரோஹித் ஷர்மா, இஷான் கிஷானுடன் தொடங்கினார், பின்னர் சூர்யகுமார் யாதவ் ஒரு நம்பமுடியாத வீரர்.

ஜஸ்பிரித் பும்ராவை பொறுத்தவரையில் இந்த மைத்தனத்தில் அவருடைய பதிவு என்பது மிகச் சாதாரணமான. அவர் 42 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்தார். நான் ஒரு பந்து வீச்சாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பும்ராவின் செயல்பாடு இங்கு பெரிதாக இல்லை என்றாலும் அவர் பும்ரா என்பதால் நான் அவருடன் செல்கிறேன். எனவே அந்த எண்களை ஒதுக்கி வைக்கலாம். பும்ரா மீண்டும் சிறப்பாக செய்யப்படுவர் என்று நம்புவதாக கூறினார் ஆகாஷ் சோப்ரா.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை