ஆர்சிபிக்கு வரும் மீம்ஸ்களை போல் வேறு எந்த அணிக்கும் நான் பார்த்தே இல்லை – ஆகாஷ் சோப்ரா.
உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது தற்போது நாடுகட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே பல அணிகளை தங்களுடைய பலம் மற்றும் பலவீனத்தை அறிந்த நிலையில் அதிலிருந்து மீண்டு வர முயற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் ஆர்சிபி அணிக்கும் அதே நிலைமை தான். ஐபிஎல் தொடங்கியதில் இருந்து ஒரு ஐபிஎல் கோப்ப
உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது தற்போது நாடுகட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே பல அணிகளை தங்களுடைய பலம் மற்றும் பலவீனத்தை அறிந்த நிலையில் அதிலிருந்து மீண்டு வர முயற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் ஆர்சிபி அணிக்கும் அதே நிலைமை தான். ஐபிஎல் தொடங்கியதில் இருந்து ஒரு ஐபிஎல் கோப்பையை கூட வெல்ல முடியாமல் தவிக்கும் ஆர்சிபி அணிக்கு இந்த சீசனும் சோகம் தான்.
கிட்டத்தட்ட இந்த தொடரில் ஆரைஇறுதி போட்டிக்கே செல்ல முடியாத அளவிற்கு சென்றுள்ளது ஆர்சிபி. இந்நிலையில் ஆரசிபி அணி விளையாடும் போதெல்லாம் அந்த அணி குறித்து மீம்ஸ்கள் சோசியல் மீடியாவில் பறக்கின்றனர். இருந்த போதிலும் ஆர்சிபி அணியின் ரசிகர்கள் இன்றும் அவர்களுடைய அணியை விட்டுக்கொடுப்பதாக இல்லை. இந்த நிலையில் தான் இது குறித்து பேசியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா.
அவர் கூறியதாவது : இதயம் ஒன்றே அதனை எத்தனை முறை உடைப்பீர் கள் என்று RCB இன் ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு பெங்களூரு அணி தோல்வியடைந்து வருகிறது. ஒரு மீம் விருந்தே நடந்து கொண்டிருக்கிறது. எந்த அணிக்காகவும் இவ்வளவு மீம்ஸ்களை நான் பார்த்ததில்லை. பெங்களூரு அணி போட்டிக்கு முன்னதாகவும் அதற்கு பிறகும் இந்த அளவிற்கு மீம்ஸ்களை நான் பார்த்ததில்லை..இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் பக்கத்திற்கு சென்றால் நீங்கள் அதனை பார்க்கலாம்.
மீண்டும் கவனம் செலுத்தும் முதல் வீரராக விராட் கோலி இருப்பார். பொதுவாக ஆரஞ்சு தொப்பி அவரது தலையில் உள்ளது, இப்போதும் உள்ளது. அவர் கடந்த போட்டியில் ஆரம்பத்தில் ஜஸ்பிரித் பும்ராவிடம் ஆட்டமிழந்தார். ஆனால் இந்த முறை வேறு யாராவது ஆட்டமிழந்து வெளியேறலாம். ஏனெனில் எங்கள் சகோதரர் விராட் கோலி இரண்டு தொடர்ச்சியான போட்டிகளில் சீக்கிரம் வெளியேற மாட்டார் என்றார்.
மேலும் பேசிய ஆகாஷ் சோப்ரா ஆல்ரவுண்டர் குறித்தும் பேசினார். அவர் கூறுகையில் : இந்த முறை வில் ஜாக்ஸ் விளையாடுவார் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் கைவிடப்படுவார் என நினைக்கிறன். இந்தப் போட்டியில் கேமரூன் கிரீன் வருவார். நான் வில் ஜாக்ஸ் மீது கவனம் செலுத்துகிறேன், ஏனென்றால் அவர் அத்தகைய வீரர். அவர் கடைசி போட்டியில் ஆட்டமிழந்தார். ஆனால் அவரினால் பேட்டிங் மற்றும் பந்துவீச முடியும். மேலும் அவர் புதிய பந்தில் சிறப்பாக பந்துவீசுவதை நான் காண்கிறேன்
ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்களைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறது. ஆனால் அதைச் அவர்களால் சரியாக செய்ய முடியவில்லை. எதிரணியில் இரண்டு இடது கை ஆட்டக்காரர்கள் தொடக்க ஆட்டக்காரர்களாக இருப்பதாலும், ஷாபாஸ் அகமது ஒரு கட்டத்தில் பேட்டிங் செய்ய வருவார் என்பதாலும், முகமது சிராஜைத் தேர்ந்தெடுப்போம். அவர் ஒரு நல்ல பந்துவீச்சாளர், அவர் பந்துகளை உள்ளே எடுத்து வர முயற்சி செய்வார் என்றார் ஆகாஷ் சோப்ரா.