ரோஹித் சர்மாவின் கடைசி 5 ஆட்டத்தை பாருங்க.. அவரோட பார்ம் இந்தியாவுக்கு முக்கியம் – முன்னாள் வீரர் கவலை.
உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது கோலாகலமாக தொடக்கி நாடுகட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே பல போட்டிகள் முடிவடைந்த நிலையில் நேற்று புள்ளிபட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் ஹைதராபாத் அணியும். மோசமாக கீழே இருக்கும் மும்பை அணியும் மோதியது. இலப்பத்ற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் மும்பை அண
உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது கோலாகலமாக தொடக்கி நாடுகட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே பல போட்டிகள் முடிவடைந்த நிலையில் நேற்று புள்ளிபட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் ஹைதராபாத் அணியும். மோசமாக கீழே இருக்கும் மும்பை அணியும் மோதியது. இலப்பத்ற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் மும்பை அணி விளையாடினாலும் அவர்களுக்கு புத்துணர்ச்சி தர வெற்றி தேவைப்பட்டது.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் டாஸை வென்ற மும்பை அணி பந்துவீச முடிவு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத் அணி பவர் பிளே ஓவர்களில் ஒப்போதும் போல விளையாடி இருந்தாலும் ஆறாவது வது ஓவரில் பும்ரா அபிஷேக் சர்மா விக்கெட்டை வீழ்த்தினார். அதற்கு பிறகு விக்கெட்கள் மளமளவென விழுக ஆரம்பித்தது.நிலையாக நின்று விளையாடிய டேவிஸ் ஹெட் 30 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இஷான் கிஷான் 9 ரன்களில் ஆட்டமிழக்க அதனை தொடர்ந்து ரோஹித் சர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஒரு விக்கெட் விழுந்த நிலையில் அப்போது களமிறங்கி அதிரடி காட்ட ஆரம்பித்த சூரியகுமார் யாதவ் அற்புதமாக விளையாடி தனி மனிதனாக மும்பை அணியை வெற்றி பாதைக்கு 17.2 ஓவர்களிலேயே அழைத்து சென்றார். இதன் போது சூர்யா 51 பந்துகளில் 102 ரன்களை அடித்திருந்தார்.
இந்நிலையில் இந்த போட்டியில் ஒருவேளை சூரியகுமார் யாதவ் ஆட்டமிழந்திருந்தால் போட்டி வேறுமாதிரியாக சென்றிருக்கும். ஏனென்றால் ரோஹித் சர்மா கடந்த ஐந்து போட்டியிகளில் மொத்தமாக 33 ரன்கள் மட்மே அடித்துள்ளார். மேலும் ஒரு இந்த 5 போட்டிகளில் ஒரு டிஜிட் ரன் மட்டுமே அடித்துள்ளார். இது இப்படியே தொடர்ந்தால் வரும் உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு கடினமாக இருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.
இந்நிலையில் தான் ரோஹித் சர்மா குறித்து பேசியுள்ளார் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா. அவர் கூறுகையில் : புதிய பந்து கொஞ்சம் நகர்ந்து. இதனால் இஷான் கிஷான் மார்கோ ஜான்சனிடம் அவுட் ஆகி வெளியேறினார். பேட் கம்மின்ஸ் பந்துவீச வந்த நிலையில் அவர் ரோஹித் சர்மாவை ஆட்டமிழக்கச் செய்தார். ரோஹித் சர்மாவின் முதல் ஆறு போட்டிகளுக்கும் கடைசி ஐந்து போட்டிகளுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.
அவர் கடைசி ஐந்து போட்டிகளில் ஒற்றை இலக்கத்தில் மட்மே ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கிறார். அது உண்மையில் இரு கவலையான விஷயம். உண்மையாக செல்லவேண்டும் என்றார் ரோஹித் சர்மாவின் ஃபார்ம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மட்டுமல்லாமல் இந்திய அணிக்கு மிகவும் தேவையான ஓன்று. பின்னர் நமன் திர் டாட் பால்களை விளையாடினார். புவனேஷ்வர் குமார் அவரை வெளியேற்றினார்,” என்று முன்னாள் இந்திய தொடக்க வீரர் மேலும் கூறினார்.