மற்றவர்களுக்கு எதிராக அப்படி ஆடலாம்.. ஆனால் பும்ராவிற்கு எதிரா அது முடியாது – ஆகாஷ் சோப்ரா விளக்கம்.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதில் இன்று 25 வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதியது.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதில் இன்று 25 வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதியது. இந்த இரு அணிகளும் இந்த சீசனில் ஒரே ஒரு வெற்றியை தான் பெற்று இருந்தார்கள். இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இரு அணிக்கும் இருந்தது. அதில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன் படி பேட்டிங் செய்த பெங்களூரு அணி ஆரம்பத்தில் இருந்தே தடுமாறி தான் விளையாடி வந்தது. இருப்பினும் மிடில் ஆர்டரில் அவர்கள் சற்று தடுமாறி விளையாடவே ரன்கள் மெதுவாக அந்த இடத்தில் குறைந்தது. ஆனால் ஆதன் பின் தினேஷ் கார்த்திக் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். எனவே பெங்களூரு அணி 20வது ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களை குவித்து இருந்தது.
ஆரம்பத்தில் விராட் கோலி அதிக அளவில் ரன்களை குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்3ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அறிமுக வீரர் வில் ஜாக்ஸ் 8 ரன்னில் வெளியேற அதன் பின் வந்த படிதார் தனது அதிரடி ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி இருந்தார். 26 பந்துகளில் 61 ரன்களை அவர் அடித்து இருந்தார். அதன் பின் டு பிளசிஸ் 61 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் எந்த வீரரும் இரண்டிலக்க ரன்களை கூட அடிக்க முடியவில்லை.
இறுதியில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி 23 பந்துகளில் 53 ரன்களை அவர் அடித்து இருந்தார். அவரது ஆட்டம் காரணமாக தான் பெங்களூரு அணி 196 ரன்களை குவிக்க முடிந்தது. இதனை தொடர்ந்து ஆடிய முன்பை இந்தியன்ஸ் அணி சுலபமாகவே போட்டியில் வென்றது. இந்நிலையில் இந்த போட்டியில் விராட் கோலி ஆட்டமிழந்தது குறித்து பேசியுள்ளார் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா.
அவர் கூறுகையில் :மும்பை டாஸ் வென்று எதிரணியை பேட்டிங் செய்யச் சொன்னபோது ஆர்சிபி அணியால் அவ்வளவு சிறப்பாக பேட் செய்ய முடியவில்லை. விராட் கோலியுடன் ஃபாஃப் டு பிளெசிஸ் இருந்தார். இந்தப் போட்டிக்கு முன்பும் நாங்கள் விராட் கோலி vs ஜஸ்பிரித் பும்ரா மீது கவனம் செலுத்துவோம் என்று விவாதித்தோம். இந்த போட்டிக்கு முன்பு பும்ரா அவரை நான்கு முறை ஆட்டமிழக்கச் செய்திருந்தார். விராட் கோலி தான் பும்ராவின் முதல் ஐபிஎல் விக்கெட்.
விராட் கோலி அதிகமாக முயற்சிப்பது போல் தோன்றியது, ஆனால் அதனால் எதுவும் நடக்காது. எனவே உயரத்தில் பந்தை அடிக்க முயற்சிப்போம். நீங்கள் அதைச் செய்யும்போது அது மற்றவர்களுக்கு எதிராக வேலை செய்யலாம். ஆனால் அது பும்ராவுக்கு எதிராக வேலை செய்யவில்லை. அதனால் எட்ஜ் பட்டு இஷான் கிஷனிடம் சென்றது. அவரும் விக்கெட்டுகளுக்குப் பின்னால் ஒரு சிறந்த கேட்சை எடுத்தார் என்றார் ஆகாஷ் சோப்ரா.