அவருக்கு “ஹேண்டில் வித் கேர்” ஸ்டிக்கர் ஒட்டிதான் போட்டிக்கு அனுப்பனும் – தமிழ்நாடு வீரர் மீது ஆகாஷ் சோப்ரா தாக்கு

இந்திய அணியானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஏற்கனேவே 2 டேஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், ஒருநாள் போட்டி தொடங்கியது. இந்த தொடரில் ஒரு போட்டியில் இந்தியாவும் மற்றொரு போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றது, இதனை தொடர்ந்து இன்று

By ·

இந்திய அணியானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஏற்கனேவே 2 டேஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், ஒருநாள் போட்டி தொடங்கியது. இந்த தொடரில் ஒரு போட்டியில் இந்தியாவும் மற்றொரு போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றது, இதனை தொடர்ந்து இன்று மூன்றவது போட்டி நடைபெறுகிறது. மேலும் இந்த போட்டியை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 5 டி20 போட்டிகளிலும் விளையாட இருக்கிறது.

இந்நிலையில் இந்திய அணியின் வீரார்கள் சிலருக்கு உலக கோப்பை போட்டிக்கு முன்னதாக ஓய்வு தேவைப்படுகிறது, மேலும் உலக கோப்பை போட்டிக்கு முன்னதாக ஆசிய கோப்பையில் ஹர்திக் பாண்டியா வழிநடத்துவார் என்று கூறப்பட்ட்ட நிலையில் வரும் அயர்லாந்து தொடரில் கலந்து கொள்ள வாய்ப்பு அவருக்கு குறைவாகவே இருக்கிறது.ஹர்திக் பாண்டியா, துணை சூர்யகுமார் யாதவுடன் சுற்றுப்பயணத்தில் ஓய்வெடுத்துள்ளார்.

இந்நிலையில் அயர்லாந்து தொடருக்கு பும்ரா கேப்டனாகவும், ருதுராஜ் துணை கேப்டனாகவும் ரின்கு சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான் ,அர்ஷ்தீப் சிங் , முகேஷ் குமார் ஆகியோர் இந்த போட்டியில் கலந்து கொள்ள இருக்கின்றனர். என பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்ட நிலையில் தான் ஆகாஷ் சஜிப்ரா இது குறித்து பேசியுள்ளார்.

ஆகாஷ் சோப்ரா கூறியது :

இதில் வாஷிங்டன் சுந்தர் பெயரும் இருக்கிறது. அவர் போட்டிகளில் எளிதில் உடையக்கூடியவர். அவர் பல முறை காயங்களை அடைந்திருக்கிறார். இவர் தொடக்கத்தில் டெஸ்ட் போட்டிகளில் மிகவும் சிறப்பாகத்தான் விளையாடி கொண்டிருந்தார். அதற்கு பிறகு ஒருநாள் போட்டியில் வாய்ப்பு கிடைத்து இந்திய அணிக்காக விளையாடினார். அதற்கு பிறகு அடிக்கடி காயம் அடைய தொடங்கினார். எனவே அவரை போட்டிக்கும் அனுப்பும் போது ஹேண்டில் வித் கேர் என ஸ்டிக்கர் ஒட்டிதான் அனுப்பு வேண்டும் என்றார் ஆகாஷ் சோப்ரா.

மேலும் பேசிய அவர் “வாஷிங்டன் சுந்தருடன் ஷாபாஸ் அகமது மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் உள்ளனர். எனவே எங்களிடம் மூன்று ஸ்பின்-பவுலிங் வீரர்கள் உள்ளன. பின்னர் பிரசித் கிருஷ்ண மீண்டும் இந்திய அணிக்கு காயம் முடிந்து திரும்பியிருக்கிறார். அது என் இதயத்தை சூடேற்றுகிறது. இறுதியாக அர்ஷ்தீப் சிங் இந்த அணியில் இடம்பெற்றுள்ளார், அது என் இதயத்தையும் சூடேற்றுகிறது. பின்னர் முகேஷ் குமார் மற்றும் அவேஷ் கான் இடம்பெற்றுள்ளனர்.

பின்னர் ருதுராஜ் கெய்க்வாட் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணிக்கு கேப்டனாகவும், இங்கு அவர் துணை கேப்டனாகவும் உள்ளார். எனவே அவரை மீண்டும் மீண்டும் தலைமை வகிப்பதில் நாம் பார்க்கிறோம். ஆனால் வாய்ப்பு கிடைக்கும்போது நாம் அவரை பயன்படுத்தி பார்க்கவில்லை. நாம் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அனைவரையும் முயற்சித் பார்த்தோம் ஆனால் ருதுராஜ் கெய்க்வாடிற்கு வாய்ப்பு கொடுப்பிக்கவில்லை என்றார் ஆகாஷ் சோப்ரா.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை