ஜெய்ஸ்வால் பேட்டிங் முன்ன மாதிரி இல்ல.. ரோஹித் போன் பண்ணி பேசணும் – முன்னாள் இந்திய வீரர் ஓபன் டாக்.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக தொடங்கு வெற்றிகரமாக நடந்து வருகிறது. அதில் நேற்று நடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்ட

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக தொடங்கு வெற்றிகரமாக நடந்து வருகிறது. அதில் நேற்று நடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி அற்புதமாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்களை குவித்தது.

இன்னார் இந்த இமாலய இலக்கை எதிர்கொண்ட ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் மோசமாக ஆட்டமிழந்தார். 9 பந்துகளில் 19 ரன்கள் அடித்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். சொல்லப்போனால் இந்த சீசனில் ஜெய்ஸ்வால் பெரிதாக விளையாடவில்லை. கடந்த சீசனில் அதிரடியாக விளையாடி சதங்களை குவித்த அவர் இந்த முறை மோசனாக விளையாடி வருகிறார். இந்நிலையில் தான் இவர் விளையாட்டு குறித்து பேசியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா.

அவர் கூறியதாவது : யஷஸ்வி இப்படி சமீப காலமாக இப்படி விளையாடி வருவதினால் யஷஸ்வியைப் பற்றி நான் கொஞ்சம் கவலைப்படுகிறேன். அவர் ஒவ்வொரு பந்தையும் அடித்து நொறுக்க முயற்சிக்கிறார். நீங்கள் ஒரு சிறந்த வீரர், நீங்கள் பேட்டிங்கின் நேரத்தை நம்புவதால் நீங்கள் நல்லவர். நீங்கள் ஒரு மல்யுத்த வீரரோ அல்லது ஆண்ட்ரே ரசல் போன்ற வீரரோ கிடையாது. உங்கள் விளையாட்டு பாணி மிகவும் வித்தியாசமானது.

எனக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வாலை மிகவும் பிடிக்கும் என்பதினால் அவர் குமார் சங்கக்காராவுடன் பேச வேண்டும் என்று நான் விரும்புகிறேன், இல்லையெனில் ரோஹித் ஷர்மா தொலைபேசியில் ஜெய்ஸ்வாலிடம் பேசி நீங்கள் டி20 உலகக் கோப்பைக்கு செல்ல வேண்டும் என்றால் இப்படி விளையாட கூடாது. கொஞ்சம் எச்சரிக்கையாக விளையாடுங்கள் என்று அவ்ர்கள் அறிவுரை குறை வேண்டும். கடந்த போட்டியில் ஜெய்ஸ்வால் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார். பின்னர் மற்றொரு பெரிய ஷாட்டை முயற்சித்து அவுட் ஆனார் என்றார் ஆகாஷ் சோப்ரா.

மேலும் பேசிய அவர் ராஜஸ்தான் அணியின் ஆட்டம் குறித்தும் பேசினார். அவர் கூறியதாவது : சஞ்சு சாம்சன் தொடக்கத்தில் ஆட்டமிழந்தார். அதனை டஜடர்ந்து ரியான் பராக் சிறிது நேரம் விளையாடினார், ஆனால் அவர் அபாரமாக விளையாடினாலும் பின்னர் அவுட் ஆனார். அதன் பிறகு விஷயங்கள் விரைவாக மாறியது. அதன் பிறகு ரோவ்மேன் பவல் சிறிது நேரம் விளையாடினார். அவர் சில சிக்ஸர்களை அடித்தார்.

ராஜஸ்தான் அணிக்கு இறுதியில் ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடி வெற்றி பெற செய்தார். இந்தப் போட்டியை பொறுத்தவரையில் இரண்டு பெரிய பெர்ஃபார்மர்கள் மட்டுமே இருந்தனர். அவர்களில் ஒருவர் சுனில் நரைன் மற்றும் ஜோஸ் பட்லர். இவருவரும் மிக அற்புதமாக வியாடியதாக கூறினார் ஆகாஷ் சோப்ரா.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை