ஜெய்ஸ்வால் இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால ஸ்டார் கிடையாது “சூப்பர் ஸ்டார்” – முன்னாள் வீரர் அதிரடி பேச்சு.
இந்திய அணியானது மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் தற்போது இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் 1 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றவுள்ளது. இந்ந
இந்திய அணியானது மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் தற்போது இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் 1 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றவுள்ளது. இந்நிலையில் இந்த தொடரின் 3 வது போட்டியில் தொடக்க வீரர்கள் தடுமாறிய நிலையில் திலக் வர்மா மற்றும் சூரிய குமார் யாதவ் இருவதும் இணைத்து சிறப்பாக விளையாடினார்கள்.
இந்நிலையில் ப்ளோரிடாவில் இன்று நடந்து முக்கியமான 4வது போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்தது. ஏனெனென்றல் ஆடுகளமானது பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்பட்டது. அதனால் 20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் 178/8 ரன்களை விளாசியது. இதனையடுத்து 179 என்ற இலக்கை துரத்த களமிறங்கிய இந்திய அணிக்கு இந்த போட்டியில் வெற்றியடைந்தே ஆகவேண்டிய கட்டாயம் இருந்தது.
ஆனால் அந்த அழுத்திலும் தொடக்க வீரர்களுக்காக கமிறங்கிய யசஸ்வி ஜெய்ஸ்வால் – சுப்மன் கில் ஆகியோர் பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி விரைவாக ரன்களை சேர்த்தனர். தனக்கு கிடைத்த அறிமுகப்போட்டியில் விளையாடிய ஜெய்ஸ்வால் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் இம்முறை பந்துகளை அணைத்து புறமும் பறக்க விட்டார். மறுபுறம் கடந்த போட்டியில் சொதப்பிய சுப்மன் கில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிரடியாக விளையாடினார்.
இந்த இளம் தொடக்க வீரர்கள் ஜோடி சேர்ந்து 150 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அவுட்டாகாமல் அடப்பிடித்து இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தது. மேலும் ஜெய்ஸ்வால் இந்த போட்டியின் மூலம் அடுத்து வரும் போட்டிகளில் தன்னுடைய இடத்தை இதன் மூலம் உறுதி செய்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தன்னுடைய யூடியூப் சேனலில் ஜெய்ஸ்வால் குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில் “எனது ஆட்ட நாயகன் யார் என்றால்? நான் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் செல்கிறேன். இந்திய ஜெர்சியில் இது அவரது நான்காவது ஆட்டமாகும். அவர் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார், முதல் டெஸ்டில் 171 மற்றும் ஆட்ட நாயகன் விருதை பெற்றார். அவர் முதல் T20I இன் ஆரம்பத்தில் வெளியேறினார். ஆனால் இரண்டாவது வைப்பில் அவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் மற்றும் இரண்டாவது போட்டியில் தனது அணியை வெற்றி பெற செய்தார்.
மேலும் ஆட்ட நாயகன் விருதும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வழங்கப்பட்டது. அவர் இந்தியாவிற்காக நான்கு முறை மற்றும் இரண்டு முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். ஜெய்ஸ்வால் வீரர் விளையாடும் விதம், அவருடைய எண்ணம் மற்றும் திறன் போன்றவற்றை பார்க்கும் போது நாம் எதிர்கால சூப்பர் ஸ்டாரைப் பார்க்கிறோம். அவர் வெறும் ஸ்டார் கிடையாது அவர் சூப்பர் ஸ்டார். அவர் மூன்று வடிவங்களிலும் இந்தியாவிற்க்க விளையாடுவதை நீங்கள் பார்ப்பீர்கள் என்றார் ஆகாஷ் சோப்ரா.