இந்த வீரருக்கு இதுதான் கடைசி உலக கோப்பை போட்டி – நட்சத்திர வீரர் குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி 2011 போல கோப்பையை வென்று நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு உச்சகட்டமாக காணப்படுகிறது.

முன்னதாக 2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் துவங்கி 2019 உலகக் கோப்பை செமி ஃபைனல் மட்டுமின்றி 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரை சமீப காலங்களில் நாக் அவுட் போட்டிகளில் இந்தியா தோல்வியை சந்திப்பதற்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தியது முக்கிய காரணமாக இருந்து வருகிறது. எனவே இம்முறை கோப்பையை வெல்ல வேண்டுமெனில் டாப் ஆர்டரில் விளையாடும் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி ஆகியோர் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்துவது அவசியமாகிறது.

இருந்த போதிலும் உலக கோப்பை போட்டியானது இந்தியாவில் நடந்தாலும் ஐபிஎல் போட்டியின் காரணமாக இங்குள்ள மைத்தனங்களின் தன்மை குறித்தும் இந்தியாவின் பந்துவீச்சாளர்கள் எப்படி இந்தியாவில் பந்துவீசுவார்கள் என்பது குறித்தும் நன்கும் தெரிந்து வைத்திருக்கின்றனர். இதனால் இந்த வருட உலக கோப்பை தொடரானது இந்திய அணிக்கு கடினமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதிலிருந்து முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணியின் வீரர்களின் எதிர்காலம் குறித்து சில கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா எதிர்வரும் 2027-ஆம் ஆண்டு உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி விளையாட வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் கூறுகையில் “சுப்மன் கில், இஷான் கிஷன், முகமது சிராஜ், பும்ரா ஆகியோர் அடுத்த உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முக்கிய வீரர்களாக இருப்பார்கள்.ஆனால் விராட் கோலி தற்போது முழு பிட்னசுடன் இருந்தாலும் 2027-ஆம் ஆண்டு வரை அதனை தொடர்வாரா? என்பது என்று கேட்டால் அது சந்தேகம் தான். எனவே இந்த உலகக்கோப்பை தொடரானது விராட் கோலிக்கு கடைசி உலக கோப்பை தொடராக இருக்கும் என்று கூறியுள்ளார்.

அதேபோன்று ஷிகர் தவான் குறித்து பேசிய அவர் கூறுகையில் “ஷிகர் தவான் இந்த உலகக் கோப்பை தொடரில் அன்லக்கி வீரர். அவர் மிகச்சிறந்த இடதுகை ஆட்டக்காரராக இருந்தும் இந்த உலகக் கோப்பை தொடரில் இடம்பெறாமல் போனது இந்திய அணிக்கு ஒரு பின்னடைவு தான். அவரைப் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர் அணியில் இருக்க வேண்டியது அவசியம். ஆனாலும் இந்திய அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவரை இந்திய அணியின் நிர்வாகம் கழட்டி விட்டிருக்கலாம் என ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை