வாஷிங்டன் சுந்தர் போன்ற பல வீரர்கள் இருந்தாலும் இவர் இல்லாதது ஏமாற்றமே – தமிழ்நாட்டு வீரர் குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா.

உலக கோப்பை போட்டியானது வரும் ஆக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. இதே நேரத்தில் இந்திய அணியானது வரும் ஆசிய கோப்பை போட்டியில் விளையாட இருக்கிறது. ஆனால் இந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியில் உள்ள அனைத்து வீரர்களினாலும் விளையாட முடியாது என்ற காரணத்தினால். ஆசிய போட்டிகளில் விளையாடும் இந்

By ·

உலக கோப்பை போட்டியானது வரும் ஆக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. இதே நேரத்தில் இந்திய அணியானது வரும் ஆசிய கோப்பை போட்டியில் விளையாட இருக்கிறது. ஆனால் இந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியில் உள்ள அனைத்து வீரர்களினாலும் விளையாட முடியாது என்ற காரணத்தினால். ஆசிய போட்டிகளில் விளையாடும் இந்திய அணிக்கு ருத்துராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டு பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் ஐபிஎல் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் ரசிகர்கள் பலரும் ஏமாற்றமடிந்துள்ளனர். ஏனென்றால் வருண் சக்கரவர்த்தி கடந்த 2021ஆம் ஆண்டு துபாயில் நடந்த டி20 உலக கோப்பையில் தேர்வாகி ஒரு போட்டி மட்டுமே ஆடிய அவரினால் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதனால் வாய்ப்பை இழந்த வர பின்னர் மீண்டும் டிஎன்பிஎல் போன்ற போட்டிகளில் விளையாடி மீண்டும் பார்மூக்கு வந்தார்.

இதனால் மீண்டும் இந்திய அணிக்கு குறைந்தபட்சம் தொடர்களுக்கவாத வாய்ப்புகள் கிடைக்கும் என்றிருந்த நிலையில் ஆசிய போட்டியில் வாய்ப்பு கிடைக்க வில்லை. இப்படிப்பட்ட நிலையில் தான் பிரபல வர்ணனையாளரான ஆகாஷ் சோப்ரா இது குறித்து தன்னுடைய யூடியூப் சேனலில் பேசியுள்ளார். அவர் கூறுகையில் “இந்த அணியை பார்க்கும் போது அவர்கள் சிறப்பாக உருவாக்கியுள்ளதாக உங்களுக்கு தெரிகிறது.

சில புதுமுக வீரர்களின் பெயர்களை இது போன்ற தொடர்களுக்கான அணில் மட்டுமே நாம் பார்க்க முடியும். ஆனால் இந்த அணியிலும் ஏதோ ஒரு முக்கிய வீரரின் பெயர் இடம் பெறாமல் இருப்பதாக தெரிகிறதா? நான் அந்த வீரரின் பெயர் வருண் சக்கரவர்த்தி என்று கருதுகிறேன். ஏனெனில் நீங்கள் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் அவர் விளையாடினார். ஆனால் திடீரென்று அவரை நீங்கள் இந்திய அணியில் இருந்து நீக்கி விட்டீர்கள்.

இருப்பினும் ஐபிஎல் தொடரில் அவர் தொடர்ந்து ஒரு சிறந்த ஸ்பின்னராக செயல்பட்டு வருகிறார். அதன் காரணமாக இந்த தொடரில் அவரும் ஒரு பகுதியாக இருப்பார் என்று நான் எதிர்பார்த்தேன். இருப்பினும் அது நடக்கவில்லை” நீங்கள் தேர்வு செய்துள்ள வாஷிங்டன் சுந்தர் தம்முடைய ஐபிஎல் அணியில் குறைவான ஓவர்கள் வீசி இன்னும் காயத்துடன் போராடிக் கொண்டிருக்கிறார்.

அதே போல சபாஷ் அஹமது இந்தியாவுக்கு அவ்வப்போது விளையாடினார். அப்படி ஏற்கனவே தேர்வான வீரர்கள் மீண்டும் வாய்ப்பு பெறும் கோணத்தில் பார்க்கும் போது வருண் சக்கரவர்த்தி இந்த அணியில் இருக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று கூறினார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை