யஷஸ்வி ஜெய்ஸ்வால் 200 அடித்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். ஏனென்றால்… கருத்து தெரிவித்த முன்னாள் வீரர்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான முதல் டெஸ்டின் 2 ஆம் நாள் பேட்டிங்கில் இந்திய அணியானது மிகவும் திறமையுமாக விளையாடிது. இதற்கு முன்னதாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் பந்துவீச்சில் 150 ரன்களுக்கு சுருட்டது. இதனையடுத்து பேட்டிங் செய்

By ·

மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான முதல் டெஸ்டின் 2 ஆம் நாள் பேட்டிங்கில் இந்திய அணியானது மிகவும் திறமையுமாக விளையாடிது. இதற்கு முன்னதாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் பந்துவீச்சில் 150 ரன்களுக்கு சுருட்டது. இதனையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணியின் ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் சதம் அடித்தனர்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் தற்போது தன்னுடைய டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் டெஸ்ட் இரட்டை சதம் அடித்தவர் என்ற சாதனை சாதனை படைக்க இன்னமும் 57 ரன்கள் மட்டுமே தேவை. இப்படிப்பட்ட நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் வீரரும் பிரபல் வர்ணனனையாளருமான ஆகாஷ் சோப்ரா யஷஸ்வி ஜெய்ஸ்வால் பற்றி பேசியிருக்கிறார்.

ஆகாஷ் சோப்ரா கூறியதாவது “முதலில் யஷாஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் அவர் விளையாடிய விதம் பற்றி பேசலாம். அவர் ஏற்கனவே 143 ரன்களில் விளையாடுகிறார். மேலும் அவர் 200 ரன்களை எடுத்தால் நான் மிகவும் ஆச்சரியப்பட மாட்டேன். ஏனென்றால் இந்த வீரருக்கு சதத்தை எப்படி இரட்டை சத்தமாக மாற்றுவது என்று நன்றாகவே தெரியும். அவர் தனது விளையாட்டின் இரண்டு அம்சங்களையும் சிறப்பாக காட்டினார்.

அவரினால் ரிஸ்க் எடுத்து ரன்கள் வரும் ஷாட்டுகளை ஆட முடிகிறது. அவரது கால்களைப் பயன்படுத்தி ரிவர்ஸ் ஸ்வீப் போன்ற கடினமான ஷாட்டுகளை மிகவும் திறமையாக விளையாட முடிகிறது. அவருக்கு அந்த திறமையும் இருக்கிறது. அவருக்கு வலிமை உள்ளது எனவே தனக்கு நேரத்தையும் கொடுத்து நீண்ட காலமாக விக்கெட்டில் தங்கலாம். எனவே இந்த வீரருக்கு எப்படி அந்த காலத்தில் விளையாடினார்களே அப்படி விளையாட நன்றாகவே தெரிந்திருக்கிறது என்றார் ஆகாஷ் சோப்ரா.

மேலும் அவர் கூறுகையில் “யஷாஸ்வி ஜெய்ஸ்வால் விளையாடிய இந்த விளையாட்டு நமக்கு என்ன சொல்கிறது? அந்த அடித்த ஸ்வீப், ரன்கள் வராமல் மைதனலத்தில் ஏன்டா நேரம் நிற்கும் போது அவர் எவ்வளவு பொறுமையாக விளையாடுகிறார் என்பதை காட்டுகிறதா? நவீன கிரிக்கெட் வீரரான இவர் ரிஸ்க்கான ஷாட்டுகளை ஆடுவதும் பெரிய ஷாட்டுகளுக்கு செல்வதும் அவருடைய டிஎன்விலே இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

அவர் ஆடிய அந்த ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டும் இதைத்தான் காட்டுகிறது. மேலும் அவர் தன்னால் சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு செயல்பட்டு நீண்ட நேரம் மைத்தனத்தில் நிற்க முடியும் என்பதை அவர் ஆடிய 2வது நாள் கூறுகிறது என்றார் ஆகாஷ் சோப்ரா.யஷஸ்வி ஜெய்ஸ்வால் தற்போது 143 ரன்களை எடுத்துள்ளார். எனவே அவர் அரை சதம் எடுப்பதற்கு குறைவான ரன்களே தேவை என்பது குறிப்பிடதக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை