விமர்சனங்களை திறமையாக சமாளிக்கிறார் பென் ஸ்டோக்ஸ் – தென்னாபிரிக்க ஜாம்பவான் ABD புகழாரம்.
2023 ஆஷஸ் தொடரில் ஏற்கனவே 3 போட்டிகள் மூடிவைத்து விட்டது. இதில் முதல் போட்டியில் தோல்விக்கு இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டிக்ளர் கொடுத்தது முக்கியமான என்றும் பலரும் விமர்சித்தார்கள். போட்டியும் அப்படித்தான் முடிந்தது. அந்த 20 முதல் 30 ரன்கள் முதல் போட்டியில் பெரும் த
2023 ஆஷஸ் தொடரில் ஏற்கனவே 3 போட்டிகள் மூடிவைத்து விட்டது. இதில் முதல் போட்டியில் தோல்விக்கு இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டிக்ளர் கொடுத்தது முக்கியமான என்றும் பலரும் விமர்சித்தார்கள். போட்டியும் அப்படித்தான் முடிந்தது. அந்த 20 முதல் 30 ரன்கள் முதல் போட்டியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கடுமையாக விமர்சிக்க பட்டார்.
மேலும் அஸ்திரலிய ஊடங்கங்களும், வர்ணனையாளர்கள் சிலரும் பென் ஸ்டோக்ஸை கடுமையாக விமர்சித்தனர். அதற்கு தன்னுடைய பேட்டிங்கின் மூலம் பதிலடி கொடுத்தார் பென் ஸ்டோக்ஸ். இப்படிபட்ட நிலையில் தான் மூன்றாவது போட்டியில் ஒருவழியாக இங்கிலந்து வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தென் ஆபிரிக்க கிரிக்கெட் வீரரான ஏபி டிவில்லியர்ஸ் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் குறித்து பேசியுள்ளார்.
ஏபி டிவில்லியர்ஸ் பேட்டி :
ABD கூறுகையில் “அவர் நம்பமுடியாத கிரிக்கெட் வீரர் என்று நினைக்கிறேன். அந்த கடைசி டெஸ்ட் போட்டியில் நாங்கள் அவரைப் பார்த்தோம், அவர் எவ்வளவு அமைதியாக இருந்தார். நான் உங்களுக்கு சொல்கிறேன் அணைத்து டெஸ்ட் போட்டிகளிலும் 5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் 2 போட்டியில் தோல்வியுற்றோம் என்றால் அதிகமான அழுத்தம் ஏற்படும். ஆனால் பென் ஸ்டோக்ஸ் அமைதியாகவும் நிதானமாகவும் விளையாடினர். குறிப்பாக 2 போட்டியில் வெற்றிக்கு மிக அருகில் பந்து தோற்ற போதும்.
மேலும் வர்ணனையாளர்கள் பென் ஸ்டோக்ஸ் மீது வைக்கப்படும் விமர்சங்களுக்கு அவர் எப்படி சமாளிக்கிறார் என்பதை பற்றி பேசிய ABD கூறுகையில் “எனக்கு தெரியும் சில வர்ணனையாளர்கள் இவரை விமர்சித்தார்கள் என்று. ஆனால் அவர்கள் கொஞ்சம் அதிகமாக போகிறார்களோ என்று தோன்றியது அதுவும் உங்களுடைய தொடரை கைகளை விட்டு நழுவும் போது. ஆனால் அந்த சமயத்திலும் கூட பென் ஸ்டோக்ஸ் அதனை திறமையாக சமாளித்தார்.
ஸ்டோக்ஸ் ஒரு அருமையான பேட்ஸ்மேன் மற்றும் ஒரு அருமையான பந்து வீச்சாளர் என்றும் அவர் பேட் மற்றும் பந்து இரண்டையும் வைத்து போட்டியை எதிராணியிடம் இருந்து ஆட்டத்தை எடுத்துச் செல்ல முடியும் என்றும் பாராட்டினார் ABD. மேலும் ஏ பி டிவில்லியர்ஸின் கருத்துக்களில் இருந்து சவாலான சூழ்நிலைகளுக்கு ஸ்டோக்ஸின் அமைதி மற்றும் பின்னடைவு குறித்து வெளிச்சம் போட்டுக் காட்டின என்றே சொல்லலாம்.
ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தின் நம்பிக்கையை மீண்டும் கொண்டு வருவதில் பென் ஸ்டோக்ஸ் முக்கிய பங்காற்றினார். மேலும் தன் மீது எந்த விமர்சனங்களும் வந்தாலும் அதனை சரியாக கடந்து இங்கிலாந்து அணியின் மிக முக்கியமான வீரர் என்பது மீண்டும் மீண்டும் பென் ஸ்டோக்ஸ் நிரூபித்து வருகிறார்.