அம்பயரின் மீது தவறா? விராட் கோலிக்கு இதை செய்திருக்க வேண்டும் – ஏபி டிவில்லியர்ஸ் புதிய ஐடியா.
உலக புகழ்பெற ஐபிஎல் 2024 தொடர்ந்து தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஞாயற்று கிழமை என்பதினால் இரண்டு போட்டிகள் நடந்தது. இதில் நேற்று முதல் போட்டியாக பெங்களூரு அணியும், கொல்கத்தா அணியும் மோதி கொண்டது. இதில் முதலில் டாஸை வென்ற பெண்களுக்கு அணி பந்துவீச முடிவு செய
உலக புகழ்பெற ஐபிஎல் 2024 தொடர்ந்து தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஞாயற்று கிழமை என்பதினால் இரண்டு போட்டிகள் நடந்தது. இதில் நேற்று முதல் போட்டியாக பெங்களூரு அணியும், கொல்கத்தா அணியும் மோதி கொண்டது. இதில் முதலில் டாஸை வென்ற பெண்களுக்கு அணி பந்துவீச முடிவு செய்தது. இந்த இரண்டு அணிகளுமே வெற்றி என்பது முக்கியமான ஒன்றாக இருக்கும் நிலையில் இரண்டு அணிகளுமே போராடியது.
குறிப்பாக தொடர்ந்து தோல்விகளை சந்தித்து இந்த ஐபிஎல் தொடரில் அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட பெங்களூரு அணி இழந்துள்ள நிலையில் வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்கத்தில் சரியாக விளையாடினாலும் ஐந்து மற்றும் ஆறாவது ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இருந்த போதியிலும் கொல்கத்தா அணிக்கு ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும் மறுபக்கம் ரன்களும் மளமளவென ஏறியது. இறுதியில் கொல்கத்தா 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 222 ரன்களை அடித்தது. இடஙக இமாலய இலக்கை எதிர்த்து களமிறங்கிய பெங்களூரு அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது விராட் கோலி ஆறு பந்துகளில் 18 ரன்களை எடுத்து நல்ல நிலையில் இருக்கும் போது அவுட் ஆனார்.
இரண்டாவது ஓவரில் ஹர்ஷித் ராணா பந்துவீச வந்தார். அதன் போது விராட் கோலி கிரீஸுக்கு வெளியே கொஞ்சம் இறங்கி சென்று அடிக்க முயற்சி செய்யும் போது அது அவரின் இடுப்புக்கு மேலே புல் டாஸாக இருந்தது. மேலும் அந்த பந்தை அடித்த விராட் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்நிலையில் விராட் ஆம்பயர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட மூன்றவது அம்பயரும் அவுட் கொடுத்தார். இதனால் சோகத்துடன் திரும்பினார் விராட் கோலி.
இந்நிலையில் இந்த நிகழ்வு குறித்து பேசியுள்ளார் முன்னாள் பெங்களூரு அணியின் வீரர் ஏ பி டிவில்லியர்ஸ் கூறுகையில் : இன்று 360 நேரலையில் இதை தெளிவுபடுத்த மறந்துவிட்டேன். மோசமான நடுவருக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை, ஏற்கனவே மேம்படுத்தப்பட்ட விளையாட்டில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான பொதுவான அறிவு. கால்பந்தில் ஆஃப்சைடு விதியைப் போலவே, கோடுகளை வரைந்து, உயரம், ஆஃப்சைடு மற்றும் லெக்-சைட் முடிவை எளிதாக்குங்கள்.
பந்து கிரீஸில் நுழையும் பொது எவ்வளவு உயரம் இருக்குமே என்று பார்க்காமல், விராட் கோலியந்த பந்தை சந்தித்த போதே இருக்கும் உயரத்தை மட்டுமே வைத்து அளவிட வேண்டும் என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் முன்னாள் பெங்களூரு அணியின் வீரர் ஏ பி டிவில்லியர்ஸ்.