“ஐபிஎல் போட்டியில் பார்த்த போதே தெரிந்தது” இந்தியாவின் இளம் வீரருக்கு ஏ.பி.டிவில்லியர்ஸ் புகழாரம்.
டெஸ்ட் அறிமுகத்தில் சதம் அடித்த 17 வது இந்தியராக ஆனதால் யஷாஸ்வி ஜெய்ஸ்வால் வரலாற்று புத்தகங்களில் தனது பெயரை பொறித்து விட்டார். ஏற்கனேவே ஐபிஎல் வரலாற்றில் 13 பந்துகளில் அரை சதம் அடித்து சாதனை படைத்த ஜெய்ஸ்வால் தற்போது டெஸ்ட் போட்டியிலும் சாதனை படைக்க தொடங்கி விட்டார். டொமினிகாவின
டெஸ்ட் அறிமுகத்தில் சதம் அடித்த 17 வது இந்தியராக ஆனதால் யஷாஸ்வி ஜெய்ஸ்வால் வரலாற்று புத்தகங்களில் தனது பெயரை பொறித்து விட்டார். ஏற்கனேவே ஐபிஎல் வரலாற்றில் 13 பந்துகளில் அரை சதம் அடித்து சாதனை படைத்த ஜெய்ஸ்வால் தற்போது டெஸ்ட் போட்டியிலும் சாதனை படைக்க தொடங்கி விட்டார். டொமினிகாவின் இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான முதல் டெஸ்டின் 2 ஆம் நாளில் ஜெய்ஸ்வால் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் 229 ரன் என்ற நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர்.
ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்த பிறகு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி இணைந்து விளையாடினர்கள். அப்படிப்பட்ட நிலையில் தான் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 171 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இருந்த போதிலும் தொடக்க போட்டியில் அதிக பந்துகளை எதிர்கொண்டது, சதம் அடித்தது என பல சாதனைகளையும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை பல முன்னணி வீரர்கள் பாராட்டி வருகின்றனர்.
ஏ.பி.டிவில்லியர்ஸ் :
அப்படிபட்ட நிலையில் தான் யஷஸ்வி ஜெய்ஸ்வால் குறித்து ஏ.பி.டிவில்லியர்ஸ் தன்னுடைய கருத்தை கூறியுள்ளார். வர கூறுகையில் “ஒரு புதிய இளம் வீரர் தன்னுடைய முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியிலேயே சிறப்பாக விளையாடி சதம் அடிப்பது என்பது எப்போதும் நடக்கும் விஷயம் கிடையாது. அவர் ஐபிஎல் போட்டியில் விளையாடிய போதே தெரிந்தது இவரிடம் அசாதாரணமான ஒரு திறமை இருக்கிறது என்று.
நீங்கள் அவர் விளையாடுவதை பார்த்தல் தெரியும் அவர் பந்துகளை விளையாடுவதற்கு அதிக நேரம் எடுத்து கொள்கிறார்.அவருக்கு பந்துவீச்சார்களின் வேகம் என்பது ஒரு தொந்தரவாக தெரியவில்லை. மேலும் அவர் சுழற்பந்து விளையாடும் போதும் மிகுந்த நேரத்தை எடுத்துக்கொள்கிறார். மற்ற வீரர்களுடன் ஒப்பிடும் போது யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு விரைவாக கிடைத்து விட்டதாக தெரிகிறது.
ஆனால் அவருடைய திறமையின் அடிப்படையில் வாய்ப்பு தர நினைத்திருக்கலாம். வர இந்தியாவிற்கு கிடைத்த மிகச்சிறந்த பரிசு. அவருடைய முதல் சதம் எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது என்றார் ஏ.பி.டிவில்லியர்ஸ். இந்நிலையில் இதே போன்று முன்னள் கிரிக்கெட் வீரரும் பிரபல வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ராவும் தான் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை 2019 ஆம் ஆண்டே சிறப்பாக வருவார் என்று கூறியதாக தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பதிவிட்டது குறிப்பிடதக்கது.