விராட் கோலியை இந்த இடத்தில் களமிறக்கினால் கட்சிதமாக இருக்கும் – ஏபி டிவில்லியர்ஸ் நம்பிக்கை.
ஐசிசி 2023 உலகக்கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக துவங்கி நவம்பர் 19 வரை நடைபெறுகிறது. அதில் சொந்த மண்ணில் வலுவான அணியாக ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2013க்குப்பின் தொடர்ந்து 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்தி 2011 போல சாம்பியன்
ஐசிசி 2023 உலகக்கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக துவங்கி நவம்பர் 19 வரை நடைபெறுகிறது. அதில் சொந்த மண்ணில் வலுவான அணியாக ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2013க்குப்பின் தொடர்ந்து 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்தி 2011 போல சாம்பியன் பட்டம் வென்று சரித்திரம் படைக்குமா என்ற எதிர்பார்ப்பு உச்சகட்டமாக காணப்படுகிறது.
கடந்த 2022 ஒருநாள் கிரிக்கெட்டில் அந்த இடத்தில் விளையாடி அதிக ரன்கள் அடித்த இந்திய வீரராக சாதனை படைத்த ஸ்ரேயாஸ் ஐயர் 4வது இடத்தின் பிரச்சனையை சரி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காயமடைந்து வெளியேறினார். மேலும் அவருக்கு பேக்-அப் வீரரும் இல்லாத காரணத்தால் மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன் இல்லாத பிரச்சனையும் சரிசெய்ய 20 வயதில் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் அறிமுகமாகி அசத்திய திலக் வர்மாவை தேர்வு செய்யலாம் என்ற கருத்துக்கள் காணப்பட்டது.
அதற்கு மத்தியில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 4வது இடத்தில் களமிறக்கலாம் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆலோசனை தெரிவித்தார். ஆனால் 3வது இடத்தில் விளையாடி நன்கு செட்டிலாகியுள்ள அவரை மாற்றினால் 2007 உலகக் கோப்பையில் சச்சினுக்கு நேர்ந்த நிலைமை தான் ஏற்படும் என்று டாம் மூடி போன்ற முன்னாள் வீரர்கள் மறுப்பு தெரிவித்தார்கள். இந்நிலையில் தான் இந்த விஷயம் குறித்து பேசியுள்ளார் ஏபி டிவில்லியர்ஸ்.
இது குறித்து அவர் கொடுத்த பேட்டியில் “நாம் இன்னும் இந்தியாவுக்காக நம்பர் 4வது இடத்தில் பேட்டிங் செய்யப் போவது யார் என்பதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். அந்த சூழ்நிலையில் 4வது இடத்தில் விராட் கோலி விளையாடுவார் என்ற சில வதந்திகளை நான் கேள்விப்பட்டேன். அந்த கருத்துக்கு நான் மிகப்பெரிய ஆதரவாக இருக்கிறேன். விராட் கோலி நம்பர் 4 இடத்தில் விளையாடுவதற்கு கச்சிதமானவர் என்று நினைக்கிறேன்.
அவர் மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடி ஒரு இன்னிங்ஸை இணைக்க முடியும். ஆனால் அவர் அதை செய்ய விரும்புகிறாரா என்பது எனக்கு தெரியவில்லை. ஏனெனில் அவர் எப்போதுமே நம்பர் 3 இடத்தில் நிலையாக விளையாடுவதை விரும்புவார் என்பதை அனைவரும் அறிவோம். அங்கு தான் அவர் அதிக ரன்களையும் சேர்த்துள்ளார். இருப்பினும் அணிக்காக நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்ற கோணத்தில் ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தை வகிக்க வேண்டும் என்றால் நீங்கள் உங்களுடைய கையை உயர்த்தி அதற்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார் ஏபி டிவில்லியர்ஸ்.
இந்நிலையில் விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கு பிறகு ஓய்வு எடுத்துக்கொண்ட நிலையில் அடுத்ததாக இன்னும் சில நாட்களில் தொடங்கும் ஆசிய கோப்பை போட்டியில் விளையாட இருக்கிறார். இந்த போட்டியை தொடர்ந்து உலக கோப்பை போட்டியிலும் விளையாட இருப்பதினால் ஆசிய கோப்பையை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டு விராட் கோலி எந்த இடத்தில் களமிறக்கலாம் என்று தேர்வாளர்கள் சோதனை செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.