குல்தீப் யாதவ் இந்தியாவின் நம்பர் 1 வெள்ளை பந்துவீச்சாளராக வரலாம் – அபினவ் முகுந்த் பாராட்டு.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை மழைக்கு மத்தியில் 1 – 0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்து 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியது. அதைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை தயாராகும் வகையில் வ
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை மழைக்கு மத்தியில் 1 – 0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்து 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியது. அதைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை தயாராகும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மீண்டும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது.
இந்நிலையில் நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 23 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரங்களுக்கே ஆல் அவுட்டானது. இதனால் இந்திய அணிக்கு இது சுலபமான போட்டியாக போகவே 22.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் இந்த வெற்றிக்கு மிகவும் முக்கியமான ஒரு காரணமாக இருந்தனர் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ்.
இவர் மூன்று ஓவர்களில் 2 ஓவர்கள் ரன்கள் எடுத்தும் கொடுக்கலாம் 6 ரன்கள் மட்டுமே கொடுத்தது 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதனால் இவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் தான் முன்னாள் இந்திய அணியின் வீரரான அபினவ் முகுந்த் குல்தீப் யாதவ் குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது “நான் முன்பே கூறியது போல் இந்திய அணியில் நிர்வாகம் குல்தீப் யாதவ் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது. முந்தைய உலகக் கோப்பைக்கு முன்பு அவர் கொஞ்சம் மோசமான பார்மில் இருந்தார். ஆனால் பின்னர் மீண்டும் கடினமாக உழைத்து தற்போது முற்று வடிவங்களிலும் சிறப்பாக செயல்படுமாறு வந்திருக்கிறார்.
அவர் இந்தியாவின் நம்பர் 1 ஒயிட்-பால் ஸ்பின்னராக வரமுடியும் என்று கருதுகிறார். தனக்கும் சாஹலுக்கும் மைத்தனத்திற்கு வெளியே நல்ல தோழமை இருப்பதாகவும், அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்கிறோம் என்றும் அவர் தானே கூறினார். இந்த தொடரில் குல்தீப் யாதவ் திறமையில் சாஹலை சற்று ஓரங்கட்டுவதாக தெரிகிறது. ஆனால் சாஹலுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். குல்தீப் கடந்த ஆண்டு முதல் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்.
அவர் ஐபிஎல் போட்டியில் KKR க்காக மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். பின்னர் டெல்லிக்கு நன்றாக வந்துள்ளார் என்று நான் நினைக்கிறேன். அவரது வேகம் மேம்பட்டுள்ளது. 2022ல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் எண்ணிக்கையைப் பாருங்கள். அவரைத் தேர்ந்தெடுக்காத கட்டத்திற்குப் பிறகு, அவர் தனது வேகத்துடன் திரும்பியுள்ளார். மேலும் பந்தின் வேகம் முன்பை விட மிகவும் சிறப்பாக இருந்தது. இதனால் அது அவரை எதிர்கொள்ள கடினமாக மாற்றுகிறது என்றரர் அபினவ் முகுந்த்.