ரஞ்சி டிராபியில் எந்த பயனும் இல்லை, இனி இந்திய அணியில் இடம்பெற ஐபிஎல் தான் விரைவான வழி போல? – விரக்தி தெரிவித்த அபினவ் முகுந்த்.

இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் முடிவைடந்த நிலையில் இந்திய டெஸ்ட் உலகக்கோப்பை பைனலில் போட்டியில் விளையாடியது ஆனால் அந்த போட்டியில் மோசமான தோல்வியை ஆஸ்திரேலியாவிடம் சந்தித்தது இந்தியா. இதனால் தற்போது இருக்கும் வீரர்கள் அடுத்து வரும் சர்வதேச போட்டிகளுக்கு தயாராக இருப்பார்களா? வெற்றியை

By ·

இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் முடிவைடந்த நிலையில் இந்திய டெஸ்ட் உலகக்கோப்பை பைனலில் போட்டியில் விளையாடியது ஆனால் அந்த போட்டியில் மோசமான தோல்வியை ஆஸ்திரேலியாவிடம் சந்தித்தது இந்தியா. இதனால் தற்போது இருக்கும் வீரர்கள் அடுத்து வரும் சர்வதேச போட்டிகளுக்கு தயாராக இருப்பார்களா? வெற்றியை தீட்டி தருவார்களா? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்தது. ஏனென்றால் ஆஸ்திரேலியாவிடம் அப்படிப்பட்ட ஒரு தோல்வியை சந்தித்தது இந்தியா.

இந்நிலையில் அடுத்தாக உலககோப்பைக்கு முன்பாக இந்தியா மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. இந்நிலையில் இந்த சுற்றுப்பயணத்தை வைத்து சில புதிய வீரர்களை இந்திய அணி சோதித்து பார்க்க விரும்புகிறது. அதன் படி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடும் இந்திய அணியில் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய பல பேருக்கும் இந்த சுற்றுப்பயணத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பிட தக்க வகையில் ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், சஞ்சு சாம்சன் (WK), இஷான் கிஷன் (WK), ஹர்திக் பாண்டியா (விசி), ஷர்துல் தாக்கூர், ஆர் ஜடேஜா, அக்சர் படேல், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜெய்தேவ் உனத்கட், முகமது. சிராஜ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார் போன்றோர் ஒருநாள் போட்டியில் விளையாடுகின்றனர். மேலும் டெஸ்ட் போட்டியில் ரஹானே மற்றும் அஸ்வின் ருதுராஜ் புதிதாக இணைந்துள்ளனர்.

குறிப்பிடதக்க வகையில் உள்ளுர் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ராஞ்சி ட்ராபியில் சிறப்பாக செயல்பட்டுவரும் சர்ஃப்ராஸ் கான், அபிமன்யூ ஈஸ்வரன், பிரியங்க் பஞ்சால் போன்றவர்கள் அதிக ரன்களை விளாசியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு பதிலாக ஐபிஎல் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஜெய்ஸ்வால், முகேஷ், ருதுராஜ் போன்றவர்களுக்கு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரில் வாய்ப்பு வழங்கியது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் பல முன்னாள் வீரர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

இப்படிப்பட்ட நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் வீரரான அபினவ் முகுந்த் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடும் இந்திய அணி குறித்து விமர்சனங்களை எழுப்பி ட்விட்டரில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அந்த பதிவில் “என்னால் இந்திய அணியில் தேர்வு குழுவை புரிந்து கொள்ள முடியவில்லை. இனி எந்த ஒரு இளம் வீரர்களும் தங்களுடைய மாநில அணிக்காக எப்படி சிறப்பாக ஆடினாலும் அதனால் அவருக்கு எந்த ஊக்கமும் கிடைக்க போவதில்லை.

இனி இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்றால் ஐபிஎல் போன்ற போட்டிகள் தான் இந்திய அணியில் விரைவாக இடம்பிடிக்க வழி போல என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதியிட்டுள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரர் அபினவ் முகுந்த்

=

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை