அழுத்தமான மனநிலையில் கூட அவர் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியை வெற்றி பெற வைத்தார் – அபிஷேக் நாயர்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான 5போட்டிகளைக் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்றது. அதில் முதல் நான்கு போட்டிகளில் இந்தியா அணி மூன்று போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று இந்த தொடரை கைப்பற்றியுள்ளது. ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்

By ·

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான 5போட்டிகளைக் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்றது. அதில் முதல் நான்கு போட்டிகளில் இந்தியா அணி மூன்று போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று இந்த தொடரை கைப்பற்றியுள்ளது. ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த நேற்று முன்தினம் ஐந்தாவது போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணி மீண்டும் ஒரு வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் வேட் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் சிறப்பாக செயல்படவில்லை. ஜெய்ஸ்வால் 21 ரன்களிலும் ருதுராஜ் 10 ரன்னிலும் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

அதன் பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வந்தாலும் மறுபக்கத்தில் ஷ்ரேயஸ் ஐயர் நின்று அணிக்கு நல்ல இலக்கை அளித்தனர். இந்திய அணியின் அதிகபட்சமாக ஷ்ரேயஸ் ஐயர் 53 ரன்களும் அக்சர் பட்டேல் 31 ரன்களும் ஜிதேஷ் ஷர்மா 24 ரன்களையும் மட்டுமே அடித்து இருந்தனர். கேப்டன் சூரியகுமார் யாதவ் 5 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார். ஆஸ்திரேலியா அணியின் சார்பில் பெஹ்ரன்டோர்ஃப் மற்றும் துவர்ஷுயிஸ் தலா இரண்டு விக்கெட்டுகளையும் ஆரோன் ஹார்டி,நாதன் எல்லிஸ் மற்றும் டி சங்கா தலா ஒரு விக்கெட்டையும் விழித்திருந்தனர் எனவே இந்திய அணி 20 அவர்கள் முடிவில் 160 ரன்களை மட்டுமே அளிக்க முடிந்தது.

161 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆஸ்திரேலியா அணியின் அதிகபட்சமாக பெண் மாசிடர்மோட்டா 53 ரன்களும் டிராவிஸ் ஹெட் 28 ரன்களும் கேப்டன் வேட் 22 ரன்களையும் அடித்து இருந்தனர்.இந்திய அணியின் வீரர்கள் போட்டியை கடைசி வரை கொண்டு சென்று இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர்.

இந்திய அணி சார்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும் அர்ஷ்தீப் சிங் மற்றும் ரவி பிஷ்னோய் தலா இரண்டு விக்கெட்டுகளையும் அக்சர் பட்டேல் 1 விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். எனவே இந்திய அணி 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இது குறித்து முன்னாள் இந்திய அணியின் வீரர் அபிஷேக் நாயர் கூறுகையில், அர்ஷ்தீப் சிங் சிறப்பாக பந்து வீசி இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். அவர் முதல் மூன்று அவர்களின் 37ரன்களை விட்டுக் கொடுத்து இருந்தால் மேலும் அவர் அழுத்தத்தில் இருந்ததால் அவருக்கு யாக்கர் பந்துகளை வீசுவதற்கு சரியாக வரவில்லை . ஆனால் அவர் கடைசி ஓவரில் பந்து வீசியது என்னை மிகவும் கவர்ந்தது.

வெளியில் இருந்த நாம் எல்லோரும் பேசினார்கள் அவர் ஏன் யார்கர் வீசவில்லை என்று, ஆனால் அவருடைய உடல் மொழியில் இருந்து அவருடைய மனநிலை மிகுந்த கட்டுப்பாட்டில் இருந்தது. வெற்றிக்கு கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் ஒரு பெரிய ஷாட்டை அடித்து இருந்தால் போட்டி தலைகீழாக மாறி இருக்கும். ஆனால் அவர் அங்கு சிறப்பாக யாக்கர்களை வீசியிருந்தார். குறிப்பாக அவர் மாத்தி மாத்தி பந்துவீசி அணியை வெற்றி பெற வைத்தார் என்று அபிஷேக் நாயர் கூறியிருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை