இப்போது சொதப்பியிருக்கலாம் ஆனால் உலக கோப்பையில் பாருங்கள் – சுப்மன் கில்லிற்கு ஆதரவளித்த முன்னாள் வீரர்
சமீப காலமாக இந்திய அணியில் ஒரு இளம் வீரரின் அதிகமானது அதிகமாக இருந்து வருகிறது. அவர் தான் சுப்மன் கில். கிரிக்கெட்டில் அணைத்து விதமான போட்டிகளிலும் சுப்மான் கில் தனது சிறப்பான பேட்டிங் திறமையால் அனைவரது மனதையும் கவர்ந்து வருகிறார். கந்த ஐபிஎல் போட்டியிலும் கூட மிகச்சிறந்த ஆற்றலை
சமீப காலமாக இந்திய அணியில் ஒரு இளம் வீரரின் அதிகமானது அதிகமாக இருந்து வருகிறது. அவர் தான் சுப்மன் கில். கிரிக்கெட்டில் அணைத்து விதமான போட்டிகளிலும் சுப்மான் கில் தனது சிறப்பான பேட்டிங் திறமையால் அனைவரது மனதையும் கவர்ந்து வருகிறார். கந்த ஐபிஎல் போட்டியிலும் கூட மிகச்சிறந்த ஆற்றலை வெளிப்படுத்திய சுப்மன் கில் 2023 தொடரின் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
இதனையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியானது நடந்தது. இதில் இந்தியா பெரும் தோல்வியை சந்தித்த நிலையில் சுப்மன் கில் இதில் சரியாக செயல்பட தவறை விட்டார். மேலும் அதற்கு பிறகு நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் கூட மிகவும் மோசமாக விளையாடினார். அதோடு ஒருநாள் போட்டியில் முதல் போட்டியில் சொதப்பினாலும் அடுத்தடுத்த போட்டியில் சிறப்பாக செயல்பாட்டு வருகிறார்.
ஆனால் பின்னர் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சொதப்பினார். இதனால் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில் சுப்மன் கில் பார்ம் கடந்த 2 மாதங்களாகவே விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் அதனை சரிசெய்ய கடுமையாக போராடி வருகிறார் சுப்மன் கில். இந்நிலையில் தான் கொல்கத்தா அணியின் துணை பயிற்சியாளராக இருட்னஹா அபிஷேக் நாயர் சுப்மன் கில் பற்றி தான் கவலை பட போவதில்லை என்று கூறியுள்ளார்.
அவர் பேசுகையில் “ஷுப்மானுக்கு வலுவான அடித்தளம் மற்றும் கலாச்சாரம் இருப்பதால் நான் அவரைப் பற்றி கவலைப்படவில்லை. ஒரு இளம் கிரிக்கெட் வீரருக்கு இவ்வளவு கிரிக்கெட் விளையாடுவதும், சீராக இருப்பதும் கடினமானது. நீங்கள் அவரை கொஞ்சம் தளர்த்தி அவருக்கு தோல்வியடைந்தார் என்று குருதி விட நம்பிக்கை கொடுக்க வேண்டும்.
அவர் மேற்கிந்தியத் தீவுகளில் விளையாடுகிறார். குறைந்த ஸ்கோரிங் கேம்களில் சிறப்பாக பேட்டிங் செய்வதற்கான எளிதான சூழ்நிலை உள்ள மைதானம் கிடையாது. இந்த அனுபவம் அவரை சிறந்ததாக்க பின்னாளில் நல்ல அனுபவத்தை கொடுக்கும் . அவர் கண்டிப்பாக ஒரு அற்புதமான செயல்திறனை உலகக் கோப்பையை போட்டியில் காட்டப்போகிறார் என்று நான் நினைக்கிறேன் என்றார் அபிஷேக் நாயர்.
இந்நிலையில் சுப்மன் கில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரின் போது கில் சவால்களை எதிர்கொண்டார். அங்கு அவர் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக போராடினார். மேலும் மைதானம் என்பது மிகவும் மெதுவாக இருந்ததாகவே கூறப்படுகிறது. இருந்த போதிலும் சுப்மன் கில் உள்நாட்டு போட்டிகளில் அதிக ஆடிய அனுபவம் இருப்பதினால் உலக கோப்பையில் அவரால் சிறப்பாக செயல்பட முடியும் என்பது கிரிக்கெட் வல்லுனர்களின் கருத்தாக இருக்கிறது.