பேட்டிங் ஆர்டரை பற்றி யோசிக்காமல் அவருக்கு வாய்ப்பு கொடுங்க – அபிஷேக் நாயர் அதிருப்தி

வெஸ்ட் இண்டீஸ் தொடரை முடித்த இந்திய அணியானது தற்போது அயர்லாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் களமிறங்கியுள்ள இந்திய அணி ஆகஸ்ட் 18ஆம் தேதி நடைபெற்ற முதல் அயர்லாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் களமிறங்கியுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் 18ஆம் தேதி நடைபெற்

By ·

வெஸ்ட் இண்டீஸ் தொடரை முடித்த இந்திய அணியானது தற்போது அயர்லாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் களமிறங்கியுள்ள இந்திய அணி ஆகஸ்ட் 18ஆம் தேதி நடைபெற்ற முதல் அயர்லாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் களமிறங்கியுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் 18ஆம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.

2024 டி20 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் இளம் வீரர்களுடன் களமிறங்கியுள்ள இத்தொடரில் இந்தியாவின் கேப்டனாக காயத்திலிருந்து குணமடைந்து நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா தலைமை தாங்குவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.அவரது தலைமையில் விளையாடும் இத்தொடரில் முதல் போட்டியில் ரிங்கு சிங் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெற்றனர்.

மேலும் இந்த தொடரில் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவர் திலக் வர்மா. இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் அற்புதமாக ஆடிய நிலையில் இந்த தொரிலும் அற்புதமாக விளையாடிவர் என்று எதிர்ப்பார்த்தனர் ஆனால் திலக் வர்மா டக் அவுட் ஆகினார். இது அனைவருக்கும் மிகவும் அதிற்சியான ஒன்றாக இருந்தது. ஆனால் இதற்கு முக்கியமான ஒன்றாக கூறப்படுவது இவர் 4 வது இடத்திற்கு பதிலாக மூன்றவது இடத்தில் களமிறங்கியது தான் என்று கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தான் முன்னாள் இந்திய அணியின் வீரர் அபிஷேக் நாயர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் திலக் வர்மா பற்றி கூறுகையில் இந்திய அணியின் நிர்வாகத்தால் எடுக்கப்படும் பல முடிவுகளால் நான் மிகவும் ஆச்சரியப்படுகிறேன். திலக் வர்மா 4-வது இடத்தில் சிறப்பாக ஆடுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள், சஞ்சு சாம்சன் வழக்கமாக ஐபிஎல் போட்டிகளில் 3-வது இடத்தில் பேட்டிங் செய்தவர். அவர் வலது கை அல்லது இடது கை பேட்ஸ்மேன் என்பது முக்கியம் கிடையாது.

உங்களுக்கு அணியில் ஐந்து இடது கை வீரர்கள் உள்ளனர். உங்களுக்கு எதிரணியில் ஒரு இடது கை சுழற்பந்து வீச்சாளர் இருக்கிறார். அவர்களது கேப்பட்ன் இரண்டு ஓவர்களை வலது கையில் வீசலாம். பந்து திரும்பாததால் இந்த ஆடுகளத்தில் இது போன்ற விஷயங்கள் முக்கியம் கிடையாது. திலக் வர்மா நான்காவது இடத்தில் பேட்டிங் செய்கிறார். அவர் நன்றாகச் செயல்படுகிறார். பேட்டிங் ஆர்டரைப் பற்றி யோசிக்காதீர்கள். அவர் தொடர்ந்து நான்கில் பேட்டிங் செய்யட்டும் என்றார் அபிஷேக் நாயர்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை