வேணுனா பாருங்க இந்த வீரர் 3 வகையான கிரிக்கெட்டிலும் மாஸ் காட்டுவார் – அபிஷேக் நாயர் கருத்து.

இந்திய அணியானது கடந்த 20 வருடங்களில் அதிகமாக மாறிவிட்டது. குறிப்பாக டி20 கிரிக்கெட் வந்ததில் இருந்து இந்திய கிரிக்கெட் மட்டுமல்லாமல் உலக கிரிக்கெட்டில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. மேலும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை காட்டிலும் டி20 போட்டிகள் மிகவும் விரைவாகவும் அதே நேரத்தில் சுவ

By ·

இந்திய அணியானது கடந்த 20 வருடங்களில் அதிகமாக மாறிவிட்டது. குறிப்பாக டி20 கிரிக்கெட் வந்ததில் இருந்து இந்திய கிரிக்கெட் மட்டுமல்லாமல் உலக கிரிக்கெட்டில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. மேலும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை காட்டிலும் டி20 போட்டிகள் மிகவும் விரைவாகவும் அதே நேரத்தில் சுவாரசியமாகவும் செல்வத்தினால் கிரிக்கெட் விளையாடாத அமெரிக்கா போன்ற நாடுகள் கூட இப்போது விளையாடுகின்றனர்.

அந்த வகையில் இளம் வீரர்களை கண்டறிய இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஒரு லீக் தொடர் என்றால் ஐபிஎல் போட்டிகளை கூறலாம். ஏனன்றால் தற்போது இருக்கும் பல வீரர்கள் ஐபிஎல் போட்டியில் சாதித்தின் மூலம் இந்திய தேர்வாளர்களால் கண்டறியப்பட்டு தற்போது இந்திய அணிக்காக விளையாடி வருகின்ற்றனர்

அந்த வகையில் ஐபிஎல் போட்டியிலும் அதற்கு முன்னாள் உள்ளூர் போட்டிகளிலும் அதிரடி காட்டிய வீரராக இடுந்த ஜெய்ஸ்வால் தற்போது இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். முன்னாள் டெஸ்ட் போட்டியில் அதிரடி காட்டி சதம் அடித்த அவர் தற்போது இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். மேழும் இந்திய அணியின் சில வீரக்கள் இன்னும் சில காலங்களே விளையாடுவார்கள் என்ற நிலையில் ஜெய்ஸ்வால் இந்திய அணியில் நல்ல இடத்தை பிடித்துவிட்டார் என்றே சொல்லலாம்.முன்னாள்

இந்த நிலையில் தான் முன்னாள் இந்திய அணையின் வீரரான அபிஷேக் நாயர் ஜெய்ஸ்வால் குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில் “யஷஸ்வி ஜெய்ஸ்வால் கடந்த இரண்டு தொடர்களில் இருந்து டி20 அமைப்பில் ஒரு பகுதியாக இருந்தார் மற்றும் தொடர்ந்து அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் கூட வருங்கால நட்சத்திரமாக பரிணமித்துக் கொண்டிருப்பவர்.

எனவே, அவர் அணியில் இருப்பார் என எதிர்பார்க்கிறீர்கள். இடைப்பட்ட ஐபிஎல் போட்டிக்கு இன்னும் வெகு தொலைவில் உள்ளது. ஆனால் அவர் இப்போது விளையாடும் விதம், நிச்சயமாக அந்த இடத்திற்கு அவர் ஒரு முன்னோடியாக இருப்பார் என்று நாயர் கூறினார். இந்த நிலையில் இன்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஜெய்ஸ்வால் துரதிஷ்டா வசமாக 6 ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிட தக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை