நீங்க பார்த்தது பழைய பும்ரா கிடையாது – ஆச்சரிய தகவலை கூறிய மும்பை வீரர்.
இந்திய அணியானது அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் சில வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட நிலையில் காயத்திலிருது திரும்பி வந்துள்ள பும்ராவிற்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. பும்ரா கடந்த வருடம் முதுகில் ஒரு காயம் ஏற்பட்டதை தொ
இந்திய அணியானது அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் சில வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட நிலையில் காயத்திலிருது திரும்பி வந்துள்ள பும்ராவிற்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. பும்ரா கடந்த வருடம் முதுகில் ஒரு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டு அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார்.
அதனை தொடர்ந்து பும்ரா பயிற்சி எடுத்து வந்த நிலையில் தான் மீண்டும் தனது பழைய நிலைமைக்கு திரும்ப கடுமையாக உழைத்த நிலையில் தான் வரும் உலக கோப்பைக்கு முன்னதாக அயர்லாந்து தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு தேர்வாளர்கள் பும்ராவை சோதனை செய்ய இருக்கின்றனர். அங்கு மூன்று டி20 போட்டிகளில் விளையாடும் இந்திய அணியில் பும்ராவின் செயல்பாடு பொறுத்தே உலக கோப்பையில் அவர் இடம்பெறுவாரா மாட்டாரா என்பது தெரியும்.
மேலும் அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது 3 டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கும் நிலையில். இந்த தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்கள் அனைவருக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால் ஜஸ்பிரீத் பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கிட்டத்தட்ட ஓராண்டாக எவ்வித போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்து வரும் அவர் எவ்வாறு இந்த தொடரில் பந்து வீசப்போகிறார் என்பதை பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் நேற்று நடந்து முடிந்த முதல் இந்தியா vs அயர்லாந்து போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில் பும்ரா தனனுடைய முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவருக்கும் ஆச்சரியம் கொடுத்தார். இப்படிப்பட்ட நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் வீரர் அபிஷேக் நாயர் பும்ரா குறித்து பேசியுள்ளார்.
அவர் பேசுகையில் “பும்ரா திரும்பி வருவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லா சிலிண்டர்களும் சுடுகின்றன. நீங்கள் பார்த்தது பும்ரா சிறந்ததை நீங்கள் பார்க்கவில்லை, ஆனால் பும்ராவிடம் எப்போதுமே இருக்கும் அந்த அனைத்து மாறுபாடுகளையும் பார்த்தீர்கள். அது எப்போதும் மனதுக்கு இதமானது. அவர் 140 கிமீ வேகத்தில் பந்துக்களை வீசுடுவதை நம்மால் பார்க்க முடிந்தது. அவர் ஆஃப் கட்டர்கள், கடினமான லெந்திலும் மற்றும் யார்க்கர்களை வீசுவதைப் பார்க்கும்போது, பும்ரா தனது தாளத்திற்குத் திரும்புவதற்கு இதுவே சிறந்த வழியாகும்.
நான் ஒரு விஷயத்தை கவனித்தேன், அவரது ரன்-அப் சிறிது நேரம் சென்றது ஆனால் அவர் பந்து வீச ஓடிய விதத்தை பார்க்கும் போது அவர் ஒரு நல்ல ரிதத்தில் இருப்பது போல் தெரிகிறது. அவர் மிகவும் நல்ல வேகத்தில் ஓடினார், மேலும் ஃபாலோ-த்ரூ கூட நன்றாக இருந்தது. அவர் இன்னும் விளையாடுவதால் வேகம் அதிகரிக்கும் என்று நினைக்கிறேன். மொத்தத்தில் பந்துவீச்சாளர் மற்றும் கேப்டனான பும்ரா சிறப்பாக செயல்பட்டதால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்றார் அபிஷேக் நாயர்.