முக்கிய வீரர்கள் அணியில் இல்லாதது எப்போதும் மகிழ்ச்சியை அளிக்காது – கேப்டன் ரோஹித் ஷர்மா பேச்சு.

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றனர். இதில் நான்கு போட்டி முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து இருந்தது.இங்கிலாந்து அணி அ

By ·

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றனர். இதில் நான்கு போட்டி முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து இருந்தது.இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 353 ரன்களை அடித்து இருந்தது.

அதன்பின் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஆரம்பத்தில் சற்று சொதப்பல் இருந்தாலும் அதன் பின் ஜுரெலின் சிறப்பான பேட்டிங்கால் இந்திய அணி 307 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதில் இந்திய அணிக்கு அதிகபட்சமாக ஜுரேல் 90 ரன்களிலும் ஜெய்ஸ்வால் 73 ரன்களையும் கில் 38 ரன்கள் அடித்திருந்தனர். இன்றைய நாளிலே மீண்டும் பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து அணி 145 ரன்கள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அதன் பின் பேட்டிங் செய்த இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி இறுதியில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இதன் மூலம் இந்திய அணி இந்தியாவில் நடந்த 17 தொடர்களையும் இந்திய அணி வெற்றி பெற்று உள்ளது. அது மட்டும் அல்லாமல் கடந்த 10 வருடங்களுக்கு பிறகு 150 ரன்களுக்கு இருந்த இலக்கை இந்திய அணி இன்று தான் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் ஜுரேல் 129 ரன்களை அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு துணையாக இருந்தார்.

வெற்றி குறித்து ரோஹித் ஷர்மா கூறுகையில், இது மிகவும் கடினமான ஒரு தொடராகும், நிறைய சவால்கள் எங்கள் மீது வீசப்பட்டன, ஆனால் நாங்கள் பதிலளித்தோம். அவர்களுடன் பேசிக்கொண்டே இருக்க முடியாது, அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதில் அவர்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். ஜுரல் அமைதி, அமைதி மற்றும் விக்கெட்டைச் சுற்றிலும் ஷாட்களை வெளிப்படுத்தினார். அவரது முதல் இன்னிங்ஸ் 90 முக்கியமானது, மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸில் கில் உடன் இணைந்து.

முக்கிய வீரர்களை நீங்கள் தவறவிடுவது எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்காது, ஆனால் ஒரு குழுவாக நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. அவர்கள் நன்றாக பதிலளித்தார்கள். நீங்கள் அப்படி ஒரு அடையாளத்தை உருவாக்கினால், நீங்கள் உங்களை ஒரு நல்ல நிலையில் வைத்திருக்கிறீர்கள். நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்து ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கும் வருகிறோம், இது ஒரு சிறந்த தொடர், அடுத்த போட்டியில் நம்பிக்கையுடன் நாங்கள் ஒரு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். என்றும் அவர் கூறி இருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை