ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் அணி வெளியீடு – முக்கிய வீரர் நீக்கம்..அதிரடி வீரர் ரீ என்ட்ரி
கிரிக்கெட்டில் எது சுவாரசியமான போட்டி என்றால் அனைவருக்கும் முதலில் நியாபகம் வருவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி தான். ஏனெனில் அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல் அதை கௌரவமாக கருதி ஆக்ரோசத்துடன் முழு திறமையை வெளிப்படுத்தி நேருக்கு நேர் மோதிக்
கிரிக்கெட்டில் எது சுவாரசியமான போட்டி என்றால் அனைவருக்கும் முதலில் நியாபகம் வருவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி தான். ஏனெனில் அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல் அதை கௌரவமாக கருதி ஆக்ரோசத்துடன் முழு திறமையை வெளிப்படுத்தி நேருக்கு நேர் மோதிக் கொள்வார்கள் என்பதாலேயே இந்தியா vs பாகிஸ்தான் போட்டிகள் உலகப்புகழ் பெற்றதாக இருக்கிறது.
இந்நிலையில் உலக கோப்பை 2023 போட்டியானது வரும் ஆக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. மேலும் இதற்கு முன்னதாகவே இந்தியா vs பாகிஸ்தான் போட்டியானது நடக்க இருக்கிறது. அதாவது ஆசிய கோப்பை போட்டியானது வரும் 30 ஆம் தேதி தொடங்குகிறது. இதனால் உலக கோப்பை போட்டிக்கு முன்னதாகவே இந்தியா vs பாஸ்கிதான் போட்டியானது நடக்க இருப்பதால ரசிகர்களின் எதிர்பார்ப்பு எந்த போட்டிக்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஆசிய கோப்பைக்கான பாஸ்கிதான் அணியானது தற்போது அறிவிக்கப்ட்டுள்ளது. இதில் 17 பேர் கொண்ட குழுவை அறிவித்துள்ளது பாஸ்கிதான் குறிப்பாக தற்போது பாஸ்கிதான் அணியின் தேர்வுக்குழு தலைவராகி இன்சமாம் உல் ஹக் இருப்பதினால் சில மாற்றங்கள் எதிர்க்கபார்கப்பட்டது. அதற்கு தரகுந்தார் போலவே பாஸ்கிதான் அணியின் துணை கேப்டனாகிய ஷான் மசூத் அதிரடியாக ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து நீக்கபப்ட்டுளார்.
ஏனெனில் இவர் இதுவரறி 9 போட்டிகளில் மட்டுமே கலந்து கொண்டாலும் இந்த ஆண்டில் 4 போட்டிகள் மட்டுமே விளையாடி 52 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனால் கூட இவர் நீக்கப்பட்டிருக்கலாம். மேலும் பாஸ்கிதான் அணியின் ஆல்ரவுண்டர் பஹீம் அஷ்ரா இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாஸ்கிதான் அணிக்கு திரும்பியிருக்கிறார்.
இந்நிலையில் இது குறித்து பேசிய தேர்வாளர் உல் ஹக் கூறுகையில் “பாஸ்கிதான் அணிக்கு ஒரு ஆல்ரவுண்டர் தேவை என்பதினால் இந்த முடிவை தங்கள் எடுத்துள்ளதாகவும், அணி தற்போது பலமாக இருப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த வளரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை போட்டியின் இறுதியில் 71 பந்துகளில் 108 ரன்களை விளாசி வெற்றிக்கு காரணமாக இருந்த தய்யப் தாஹிர் ஆசிய கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளார். அதோடு இலங்கை தொடையில் சதம் விளாசிய அஷ்த் சக்கிலுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
🚨 Our squad for the Afghanistan series and Asia Cup 🚨
— Pakistan Cricket (@TheRealPCB) August 9, 2023
Read more: https://t.co/XtjcVAmDV7#AFGvPAK | #AsiaCup2023 pic.twitter.com/glpVWF6oWW
ஆசிய கோப்பைக்கான பாஸ்கிதான் அணி :
பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான், முகமது ரிஸ்வான் (wk), ஃபகார் ஜமான், அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக், சவுத் ஷகீல், சல்மான் அலி ஆகா, இப்திகார் அகமது, முகமது நவாஸ், உசாமா மிர், ஹாரிஸ் ரவுஃப், நசீம் ஷா, ஷாஹீன் அப்ரிடி, தயப் தாஹிர், முகமது ஹாரிஸ், ஃபஹீம் அஷ்ரப், முகமது வாசிம்