நெதர்லாந்து அணியை எளிதாக வெற்றி பெற்றதன் மூலம் சாம்பியன் டிராபி முதல் முறை தகுதியாகி உள்ள ஆப்கானிஸ்தான் அணி.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவின் கோலாகலமாக நடைபெற்ற வருகிறது. அதில் இன்று 34-வது போட்டியை நெதர்லாந்து அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் மோதின. இதற்கு முன்பு புள்ளி பட்டியல் ஆப்கானிஸ்தான்
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவின் கோலாகலமாக நடைபெற்ற வருகிறது. அதில் இன்று 34-வது போட்டியை நெதர்லாந்து அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் மோதின. இதற்கு முன்பு புள்ளி பட்டியல் ஆப்கானிஸ்தான் அணி ஆறாவது இடத்திலும் நெதர்லாந்து அணி எட்டாவது இடத்திலும் இருந்து வந்தது.
ஆப்கானிஸ்தானின் கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று இரண்டில் மட்டுமே தோல்வி தழுவி தற்போது பலம் வாய்ந்த அணியாக இன்றைய போட்டியில் மோதின. இதற்க்கு முன்பு நெதர்லாந்து அணி கடந்த 5 போட்டிகளில் இரண்டில் மட்டும் வெற்றி இன்றைய போட்டியில் மோதின. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் தேர்வு செய்தது ஆனால் அது அவர்களுக்கு சற்றும் கைகொடுக்கவில்லை.
நெதர்லாந்து அணிக்கு பேட்டிங் சிறப்பாக அமையவில்லை. நெதர்லாந்து அணி 46.3 ஒவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. நெதர்லாந்து அணியின் அதிகபட்சமாக சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் 58 ரன்களும் மேக்ஸ் 42 ரன்களும், ஆங்கர் மேன் 29 ரண்களும் மட்டுமே அடித்திருந்தனர். ஆப்கானிஸ்தானின் சார்பில் நபி மூன்று விக்கெட்டுகளையும் நூர் அகமது இரண்டு விக்கெட் களையும் ரஹ்மத் 1 விக்கெட்டையும் வீழ்த்தி இருந்ததனர். மீதமுள்ள நான்கு விக்கெட்டுகளும் நெதர்லாந்தணியின் மோசமான பேட்டிங்கால் மீதம் இருந்த நாக்கு விக்கெட்டுகளையும் இழந்து தவித்தது நெதர்லாந்து அணி.
180 ரன்களை இலக்காகக் கொண்டு களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 31.3 அவர்களின் 3 விக்கெட் இழப்பிற்கு 181ரன்களை குவித்து எளிதாக இந்த போட்டியை வெற்றி பெற்று விட்டது. ஆப்கானிஸ்தானின் சார்பாக ஷைடி 56 ரன்கள் ரஹ்மத் ஷா 52 ரன்கள் உமர் சாய் 31 ரன்களையும் அடித்து இருந்தனர். நெதர்லாந்து அணியின் சார்பில் சாகிப் சுல்பிகர், ரோலோஃப் வான் டெர் மெர்வே மற்றும் லோகன் வான் பீக் தலா ஒரு விக்கெட்டு மட்டுமே எடுத்து இருந்தனர். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. அதன் மூலம் புள்ளி பட்டியலில் தற்போது 5 வது இடத்தில் ஆப்கானிஸ்தான் இருந்து வருகிறது. இந்த வெற்றியின் மூலம் நெதர்லாந்து அணியை எளிதாக வெற்றி பெற்றதன் மூலம் சாம்பியன் டிராபி முதல் முறை தகுதியாகி உள்ள ஆப்கானிஸ்தான் அணி.