10 வருடங்களுக்கு பிறகு தர்மசாலா மைதானத்தில் நடக்கும் ஐபிஎல் போட்டி.
உலகிலேயே பெரிய டி20 போட்டிகளில் ஒன்றான ஐபிஎல் தொடர் தற்போது கோலாகலமாக நடந்து தற்போது விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த ஐபிஎல் பொறுத்தவரையில் சிறப்பாக ஆடிய நடப்பு சம்பியன்களான குஜராத் டைட்டன்ஸ் அணியினர் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதியாகியிருக்கிறார். அதோடு டெல்லி கேபிடல
உலகிலேயே பெரிய டி20 போட்டிகளில் ஒன்றான ஐபிஎல் தொடர் தற்போது கோலாகலமாக நடந்து தற்போது விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த ஐபிஎல் பொறுத்தவரையில் சிறப்பாக ஆடிய நடப்பு சம்பியன்களான குஜராத் டைட்டன்ஸ் அணியினர் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதியாகியிருக்கிறார். அதோடு டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் என்ற இரண்டு அணிகளும் இந்த வருட ஐபிஎல் பிளே ஆஃப் செல்லவும் வாய்ப்பை இழந்திருக்கின்றனர்.
அப்படிப்பட்ட நிலையில் தான் இன்று 7.30 மணியளவில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றனர். இந்த போட்டியில் டெல்லிக்கு முக்கியமானதாக இல்லாமல் இருந்தாலும் பஞ்சாப் அணிக்கு மிகவும் முக்கியமான போட்டி என்றே கூறலாம். இந்த போட்டியில் பஞ்சாப் அணி அதிக NRR புள்ளிகளில் வெற்றிபெற்றால் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்திற்கு செல்வதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் இந்த போட்டியை விட ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் 10 ஆண்டுகளுக்கு பிறகு இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க நிர்வாகம் ஒரு முடிவை எடுத்துள்ளது. அதாவது 10 வருடங்களுக்கு பிறகு இன்று 19,900 பார்வையாளர்களை கொண்ட தர்மசாலா மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றனர். மேலும் இந்த போட்டிக்கு பிறகு 66 வது போட்டியும் இந்த மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
போட்டி நடைபெறாத காரணம் :
மேலும் மைதானதின் தரையை சுற்றிலும் எல்இடி விளக்குகள் மற்றும் மைதானத்தை சுற்றி 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். அதோடு இந்த மைதானம் இருக்கும் இடம் குளிந்த பிரதேசம் என்பதினால் வீரர்களும் சோர்வாகாமல் விளையாடுவார்கள். ஆனால் இந்த மைதானத்தில் கடைசியாக 2013ஆம் ஆண்டு தான் கடைசியாக ஐபிஎல் போட்டி நடந்தது. இமாச்சல பிரதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் மத்திய அரசுக்கு இடையே சட்ட போராட்டம் நடனத்தினால் போட்டிகள் நடக்காமல் இருந்தனர்.
அப்படிப்பட்ட நிலையில் தான் இன்று 10 வருடங்களுக்கு பிறகு தர்மசாலா மைதானத்தில் போட்டி நடைபெற இருக்கிறது. இன்று நடக்கும் போட்டியை பொறுத்தவரையில் பஞ்சாப் அணி 12 போட்டிகளை ஆடி அதில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் எடுத்து 8வது இடத்தில இருக்கிறது. ஒரு வேளை இந்த போட்டியிலும் வரும் 19 ஆம் தேதி நடக்கும் போட்டியிலும் பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் இந்த வருட ஐபிஎல் சீசனில் பிளே ஆஃப் செல்ல 50 சதவிகிதம் வாய்ப்பு இருக்கிறது.