112 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி மாபெரும் சாதனை படைத்த இந்திய அணி. அது என்ன சாதனை தெரியுமா??
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தி அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. கடைசி போட்டியானது நேற்று தரம்சாலாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஒரு போட்டியில் இந்திய அணியின் வீரர் அஷ்வினும் இங்கிலாந்து அணியின் வீரர் பேர்ஸ்டோவும் தங்களது 100வ
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தி அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. கடைசி போட்டியானது நேற்று தரம்சாலாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஒரு போட்டியில் இந்திய அணியின் வீரர் அஷ்வினும் இங்கிலாந்து அணியின் வீரர் பேர்ஸ்டோவும் தங்களது 100வது டெஸ்ட் போட்டியில் இன்று களமிறங்கினார்கள் இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
நேற்றையஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்த இங்கிலாந்து அணி இந்தியா அணியின் பந்துவீச்சு சமாளிக்க முடியாமல் திணறியே வந்தது. அதிலும் குறிப்பாக சுழற்பந்து வீச்சின் ஆதிக்கமே தான் அதிக அளவில் இருந்தது. இங்கிலாந்து அணி 57.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்களை மட்டுமே அடித்து இருந்தது. அதில் இங்கிலாந்து அணியின் அதிகபட்சமாக க்ராலி 69 ரன்களையும் பேர்ஸ்டோ 29 ரன்களையும் ஜோ ரூட் 26 ரன்களையும் அடித்திருந்தனர்.
இந்திய அணியின்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அதற்கு பின் வந்த பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினார். இந்திய அணியின் சார்பில் குல்தீப் 5 விக்கெட்டுகளையும் அஸ்வின் நான்கு விக்கெட்டுகளையும் ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். அதன் பின் பேட்டிங் செய்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 477 ரன்களை அடித்து இருந்தனர். ரோஹித் ஷர்மா மற்றும் கில் சதத்தை பூர்த்தி செய்து இருந்தார்.அதுமட்டுமல்லாமல் மூன்று வீரர்கள் அரைசதத்தை பூர்த்தி செய்து இருந்தனர்.
அதன் பின் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் இருந்தே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தத்ததளிதது. அதில் ரூட் மட்டுமே இங்கிலாந்து அணிக்கு ரன்களை சேர்த்து கொண்டு இருந்தார். மறுபக்கம் அவருக்கு போதுமான அளவிற்கு சப்போர்ட் கிடைக்கததால் இங்கிலாந்து அணி 195 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதில் அதிகபட்சமாக ரூட் 84 ரன்களை அடித்து இருந்தார். இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாகவே இருந்தது.
அஷ்வின் 5 விக்கெட்டுகளையும் பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும் பும்ரா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தார். எனவே இந்திய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இதன் மூலம் இந்திய அணி ஒரு சாதனையும் படைத்து இருந்தது. அது என்னவென்றால் 112 ஆண்டுகளுக்கு பிறகு, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்து, மற்ற 4 போட்டிகளிலும் வென்ற அணி என்ற பெருமையை பெற்றது இந்திய அணி.