14 மாதங்களுக்கு பிறகு கிடைத்த வாய்ப்பு தொடர்ந்து சொதப்பலில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா.

இந்திய அணி இந்த வருடம் அமேரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெறும் உலகக்கோப்பை 2024க்காக இளம் வீரர்களை தயார் படுத்தி வருகிறது. அதற்க்கு முதற்கட்டமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 T20 தொடர்களை இந்தியாவில் விளையாட உள்ளது. அதில் இன்று இரண்டாவது போட்டி இந்தூர் நடைபெற்றது. இந

By ·

இந்திய அணி இந்த வருடம் அமேரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெறும் உலகக்கோப்பை 2024க்காக இளம் வீரர்களை தயார் படுத்தி வருகிறது. அதற்க்கு முதற்கட்டமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 T20 தொடர்களை இந்தியாவில் விளையாட உள்ளது. அதில் இன்று இரண்டாவது போட்டி இந்தூர் நடைபெற்றது. இந்த தொடருக்கு இந்திய அணியின் முன்னனி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா 14 மாதங்களுக்கு பின் T20 இந்திய அணியில் அவர் இணைந்துள்ளார்.

இந்த தொடரில் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக வெளியேறிய நிலையில் இந்த தொடரில் ரோஹித் ஷர்மா இந்திய அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியை இந்திய அணி வென்று இருந்தது. அதன் பின் இந்திய அணி இரண்டாவது போட்டியை இன்று விளையாடி இருந்தது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பௌலிங்கை தேர்வு செய்து இருந்தார்.

ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை மட்டுமே அடித்து இருந்தார்கள். அதில் அதிகபட்சமாக குல்பாடின் 57 ரன்களையும் நஜிபுல்லா 23 ரன்களையும் மற்றும் முஜீப் 21 ரன்களை மட்டுமே அடித்து இருந்தனர். இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும் ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளையும் அக்சர் பட்டேல் 2 விக்கெட்டுகளையும் ஷிவம் துபே 1 விக்கெட்டையும் அவர் வீழ்த்தி இருந்தனர்.

அதன் பின் 173 ரன்களை இலக்காகக்கொண்டு களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்தில் பெரும் அடியாக விழந்தது கேப்டன் ரோஹித் ஷர்மாவின் ஆட்டமிழப்பு தான். இந்திய அணி 5 ரன்களை இருக்கும் போது கேப்டன் ரோஹித் ஷர்மா முதல் பதில் ஆட்டமிழந்து வெளியேறினார். 14 மாதங்களுக்கு பின் சர்வதேச T20 போட்டியில் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டனுக்கு தொடர்ந்து சொதப்பல்களாகவே இருந்து வருகிறது.

முதல் போட்டியில் அதே போல் தான் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார். இன்றும் அவர் அதே போல் தனது 150 T20 போட்டியில் முதல் பந்திலே ஆட்டமிழந்து மீண்டும் ரசிகர்களுக்கு அவர் ஏமாற்றத்தையே அவர் அளித்துள்ளார். சர்வதேச போட்டிகளில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் ரோஹித் ஷர்மா தற்போது 2 இடத்திற்கு முன்னேறியுள்ளார். தற்போது இந்திய அணி அணி 2 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களில் விளையாடி வருகிறது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை