‘அன்று அஸ்வின் செய்த போது கோலி இதைத்தான் செய்தார்’ RCB வீரரின் Mankad சர்ச்சை. பழைய வீடியோவை பகிர்ந்து நெட்டிசன்கள் கேள்வி.

நேற்று நடந்த ஐபிஎல் போட்டி சின்னசாமி மைதானத்தில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் மோதின. அந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி தொடக்கத்திலேயே அதிரடியாக விளையாடி 212 ரன்களை குவித்தது. இந்நிலையில் அடுத்த இனிங்கை ஆடிய லக்னோ அணி தொடக்க 10 ஓவர்களில் திணறினாலும் அடுத்து வரும்

By ·

நேற்று நடந்த ஐபிஎல் போட்டி சின்னசாமி மைதானத்தில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் மோதின. அந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி தொடக்கத்திலேயே அதிரடியாக விளையாடி 212 ரன்களை குவித்தது. இந்நிலையில் அடுத்த இனிங்கை ஆடிய லக்னோ அணி தொடக்க 10 ஓவர்களில் திணறினாலும் அடுத்து வரும் ஓவர்களில் பெங்களூரு பௌலர்களை பந்தாடினார் நிகோலஸ் பூரான். இந்நிலையில் கடைசி ஓவரில் லக்னோவின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது

இந்நிலையில் ரசிகர்களின் இதயத் துடிப்பை எகிறச் செய்த கடைசிப் பந்தில், வெற்றிக்குத் தேவையான ரன்னை எப்படியாவது எடுத்து விட வேண்டும் என்று முனைப்புடன் நான்-ஸ்ட்ரைக்கர் முனையில் நின்றிருந்த ரவி பிஷ்னோய், பந்துவீசப்படும் முன்பே கிரீசை விட்டு வெளியேறிவிட்டார். இதனை முன்பே எதிர்பார்த்திருந்தது போல், ஹர்ஷல் படேல் பந்துவீசாமல் மன்கட் முறையில் ஸ்டம்புகளை பெயர்த்து அவரை அவுட் செய்ய முயன்றார்

இது நல்ல முயற்சியாக இருந்த போதிலும் பதற்றத்தில் அவர் ஸ்டம்புகளை பெயர்க்கத் தவறிவிட்டார். பின்னர் சுதாரித்துக் கொண்டு பந்தை தூக்கி எறிந்து அவர் ஸ்டம்புகளை சிதற விட்டாலும் நடுவர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். காரணம், முதல் முயற்சியில் அவர் ஸ்டம்புகளை தாக்கியிருந்தால் அது மன்கட் முறையில் அவுட்டாக அமைந்திருக்கும். இந்நிலையில் இந்த வீடியோ பதிவு சோசியல் மீடியாவில் வைரலாக நிலையில் தான் விராட் கோலியின் பழைய வீடியோ பதிவு ஓன்று சோசியல் மீடியாவில் படு பயங்கரமாக வைரலாகி வருகிறது.

அதாவது கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் 20 ரன்களுக்கு மேலே தேவை பட்டிருந்த நிலையில் உமேஷ் யாதவ் வீசிய கடைசி ஓவரின் இரண்டாவது பந்தில் விராட் 6 அடிக்க முயற்சி செய்தார். ஆனால் அவரால் 6 அடிக்க முடியாமல் பவுண்டரி பக்கம் நின்று கொண்டிருந்த விராட்கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார். அப்போது அஸ்வின் மன்கட் முறையில் அஸ்வின் அவுட் ஆக்குவதை ஜாடையாக பேசியிருந்தார்.

அதனை தொடர்ந்து தான் தற்போது நடந்து வரும் ஐபிஎல் சீசனில் நேற்று நடந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் கடைசி ஓவரின் கடைசி பந்தில் 1 ரன் தேவை பட்டது. அதனால் ஹர்ஷல் படேல் முறையில் ரன் அவுட் எடுக்க முயற்சி செய்து தோல்வியடைந்தார். அப்படியொரு நிலையில் தான் விராட் கோலியின் அணியில் இருக்கும் ஒரு நபரே விராட்கோலி கலாய்த்த விஷயத்தை செய்கிறார் என்று விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை