என்னுடைய குடும்பத்திற்கு பிறகு இந்த மூன்று வீரர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் – ரவிச்சந்திர அஷ்வின்
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தி அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. கடைசி போட்டியானது நேற்று தரம்சாலாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஒரு போட்டியில் இந்திய அணியின் வீரர் அஷ்வினும் இங்கிலாந்து அணியின் வீரர் பேர்ஸ்டோவும் தங்களது 100வ
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தி அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. கடைசி போட்டியானது நேற்று தரம்சாலாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஒரு போட்டியில் இந்திய அணியின் வீரர் அஷ்வினும் இங்கிலாந்து அணியின் வீரர் பேர்ஸ்டோவும் தங்களது 100வது டெஸ்ட் போட்டியில் இன்று களமிறங்கினார்கள் இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
நேற்றையஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்த இங்கிலாந்து அணி இந்தியா அணியின் பந்துவீச்சு சமாளிக்க முடியாமல் திணறியே வந்தது. அதிலும் குறிப்பாக சுழற்பந்து வீச்சின் ஆதிக்கமே தான் அதிக அளவில் இருந்தது. இன்றைய போட்டியில் அவர்களது ஆதிக்கமே அதிகம் இருந்ததால் அனைத்து விக்கெட்டுகளையும் சுழல் பந்துவீச்சாளர்கள் மட்டுமே அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். இதில் நூறாவது போட்டியில் களம் இறங்கிய அஸ்வினும் தனது கடமைக்கு நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
இங்கிலாந்து அணி 57.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்களை மட்டுமே அடித்து இருந்தது. அதில் இங்கிலாந்து அணியின் அதிகபட்சமாக க்ராலி 69 ரன்களையும் பேர்ஸ்டோ 29 ரன்களையும் ஜோ ரூட் 26 ரன்களையும் போக்ஸ் 24 ரன்களையும் அடித்திருந்தனர் இந்திய அணியின்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அதற்கு பின் வந்த பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினார். இந்திய அணியின் சார்பில் குல்தீப் 5 விக்கெட்டுகளையும் அஸ்வின் நான்கு விக்கெட்டுகளையும் ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர்.
சுழல் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் அதிக அளவில் இருந்ததால் சுழற் பந்துவீச்சாளர்களை இந்த போட்டியில் அனைத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதில் குல்தீப் யாதவ் தனது நான்காவது ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அது மட்டுமல்லாமல் கடந்த 100 வருடங்களில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய சுழல் பந்துவீச்சாளர் என்று பெருமையையும் குல்தீப் யாதவ் பெற்று இருந்தார். அதன் பின் இந்திய அணி நாள் முடிவில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 135 ரன்களை அடித்து இருந்தது.
தனது நூறவது போட்டி குறித்து அஷ்வின் கூறுகையில், நான் ஷார்ட் மிட் விக்கெட்டில் கோலி, லெக் ஸ்லிப்பில் புஜாரா, ஸ்லிப்பில் ரஹானே என்றென்றும் இருந்தனர். என் குடும்பத்திற்கு அப்பாற்பட்ட ஒருவருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும் என்றால் அது அந்த மூவருக்கும் தான் என்று கூறி இருந்தார். இந்திய தற்போது 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 188 ரன்களை அடித்து விளையாடி வருகிறது.