என்னுடைய தந்தை அங்கு இருந்திருந்தால் என்னைப் பற்றி பெருமைப்பட்டிருப்பார் – உணர்ச்சிவசப்பட்டு பேசிய சிராஜ்.
உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டியானது தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டியில் முக்கியமான பந்துவீச்சாளரா களமிறங்கி இருப்பவர் முகமது சிராஜ். சிராஜ் தன்னுடைய வேகமான பந்துவீசுக்கும் மைத்தனத்தில் ஆக்கிரோஷமான குணத்திற்கும் பெயர் போனவர். இந்த உலகக்கோப்பை இறுதி போட்டியில்
உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டியானது தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டியில் முக்கியமான பந்துவீச்சாளரா களமிறங்கி இருப்பவர் முகமது சிராஜ். சிராஜ் தன்னுடைய வேகமான பந்துவீசுக்கும் மைத்தனத்தில் ஆக்கிரோஷமான குணத்திற்கும் பெயர் போனவர். இந்த உலகக்கோப்பை இறுதி போட்டியில் கூட சில ஆக்கிரோஷமான நடத்தைகளை வெளிப்படுத்தினர். ஆனால் அது இந்தியாவிற்கு நன்மையாக முடிந்தது.
இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்கில் 108 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்கில் 80 ரன்களை விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இந்நிலையில் ஆஸ்திரேலியா இரண்டாவது நாளில் டிக்ளர் கொடுத்த நிலையில் தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது, இதுவரையில் சுப்மன் கில் மட்டுமே விக்கெட்டை இழந்து 66 ரன்களை குவித்துள்ளது இந்தியா.
இப்படிப்பட்ட நிலையில் தான் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய முகமது சிராஜ் கூறுகையில் “நான் பந்துவீசும் போது ஆக்ரோஷம் மிகவும் முக்கியமானது. டெஸ்ட் கிரிக்கெட் என்பது ஆக்ரோஷம். எளிமையான பந்துகளை வீசிவிட்டு எதுவும் சொல்லாமல் வெளியேறுவது அல்ல. ஆக்ரோஷத்தால் அங்கும் இங்கும் பந்து வீசும் சில பந்துவீச்சாளர்களைப் போலல்லாமல், எனது பந்துவீச்சு துல்லியமானது. அதிக ஆக்ரோஷமான நான், அதிக வெற்றியைப் பெறுகிறேன்” என்று சிராஜ் கூறினார்.
சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அறிமுகமானதில் இருந்து, முகமது சிராஜ் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தினார். அவரது அற்புதமான பந்துவீச்சு திறன் அவரை இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு முக்கிய வீரரகவே மாற்றியது. சிராஜின் திறமையும் விளையாட்டின் மீதான அர்ப்பணிப்பும் விரைவான பந்துவீச்சால் எதிரணியின் வீரர்களை திக்குமுக்காடி கொண்டு இருக்கிறார்.
இதற்கிடையில் முகமது சிராஜ் கிரிக்கெட்டில் தனது ஆரம்ப நாட்களையும் பற்றி கூறினார். தான் நிறைய டென்னிஸ்-பால் கிரிக்கெட் விளையாடியதாகவும் ஆனால் மிகப்பெரிய அளவில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவேன் என்று நினைக்கவில்லை என டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் அறிமுகத்தை நினைவுகூர்ந்த சிராஜ் உணர்ச்சிவசப்பட்ட தனது தந்தையை நினைவுகளையும் நினைவு கூர்ந்தார்.
அவர் கூறுகையில் “நான் நிறைய டென்னிஸ் பந்து கிரிக்கெட் விளையாடுவேன். நான் இந்திய வீரராக முடியும் என்று நினைக்கவே இல்லை. போட்டிகளில் நான் 100 சதவிகிதத்தை கொடுக்கிறேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்டில் விளையாட எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. என்னுடைய தந்தை அங்கு இருந்திருந்தால் என்னைப் பற்றி பெருமைப்பட்டிருப்பார், ஏனென்றால் டெஸ்ட் விளையாடுவது மரியாதை மற்றும் மரியாதைக்குரிய விஷயம்” என்று சிராஜ்