“வெஸ்ட் இண்டீஸ் ரொம்ப பாவம்” மைதானம் இப்படி இருந்தால் எப்படி விளையாடுவார்கள் – நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்த அஸ்வின்.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியாது பல தொடர் போட்டியில் விளையாடி வருகிறது.இடஙக சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே இந்தியா டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற கணக்கிலும் ஒருநாள் போட்டியில் 2-1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணியானது தற்போது 5 போட்டிகள் க

By ·

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியாது பல தொடர் போட்டியில் விளையாடி வருகிறது.இடஙக சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே இந்தியா டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற கணக்கிலும் ஒருநாள் போட்டியில் 2-1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணியானது தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் அற்புதமாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது இரண்டாவது போட்டியிலும் வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில் இந்த போட்டியின் தொடக்கத்தில் இருந்தே மைத்தனம் குறித்தும், அத்தியாவசிய வசதிகள் குறித்தும் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதற்கொண்டு பலரும் விமர்சனம் செய்தனர். மேலும் மைத்தனங்களை விட்டு வேறு மைதானம் செல்வதற்கும் சைல சிக்கல்களை அனுபவித்ததாக பல கூறிவந்த நிலையில் தான் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் இது குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில் “மேற்கிந்தியத் தீவுகளைப் பொறுத்தவரை, அவர்கள் உண்மையில் ஆன்டிகுவா, பார்படாஸ் போன்ற வெவ்வேறு நாடுகளிலும், தீவுகளில் இருந்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றாக மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக விளையாடுகின்றனர். எனவே, அந்தத் தீவுகள் அனைத்திலும் அவர்களின் உள்கட்டமைப்பு நன்றாக வளர்ந்திருக்கிறதா என்று நீங்கள் என்னிடம் கேட்டால்? உண்மையில் நான் இல்லை என்றுதான் கூறுவேன்.

இந்தியா பார்படாஸ் டெஸ்ட் சென்டரில் விளையாடியது. அப்போது நாங்கள் அங்குள்ள வலைகளில் பயிற்சி செய்தபோது மேற்பரப்பில் புல் எதுவும் மிச்சமில்லை. மேலும் அவர்களின் வலைகள் மிகவும் பழையதாகத் தெரிந்தன. நான் அவர்களைக் குறை கூறவோ அல்லது எதையுமே குற்றம் சாட்டுவதற்காக இதைச் சொல்லவில்லை. உண்மையில் அவர்களுக்காக நான் மிகவும் வருத்தமடைகிறேன்.

அவர்களது டெஸ்ட் மையத்தில் உள்கட்டமைப்பு இப்படி இருந்தால். அவர்களின் கிரிக்கெட் வீரர்கள் எப்படி சிறப்பாக பயிற்சி செய்து போட்டிகளில் அசத்த முடியும். இந்த மாதிரியான மைத்தனத்திலும், சூழ்நிலையிலும் அவர்கள் பயிற்சி செய்தவுடன் திடீரென்று இந்தியாவிற்கு வந்து சற்று வேகமான மேற்பரப்பில் விளையாடும்போது ​​​​அது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மிகவும் கடினமாக இருக்கும். அவர்கள் அது போன்ற பிட்சுகளில் விளையாட தங்களை தகவமைத்து கொள்ள வேண்டும்.

தற்போது மேற்கிந்திய தீவுகளில் ஆடுகளங்கள் பேட்டிங் செய்யவும் பௌலிங் செய்யவும் மெதுவாக மாறிவிட்டன. ஆடுகளத்தை பராமரிப்பதில் அதிக முயற்சியை நிர்வாகம் எடுக்க வேண்டும். ஆடுகள பராமரிப்பு என்ற பெயரில் புல்லை வெட்டி அங்குள்ள நிலத்தி சமபடுத்துவதால் மட்டுமே எதுவும் நடந்து விடாது. நான் ஏற்கனவே இதனை பற்றி பேசினேன். ஏனென்றால் அப்படி செய்தால் அங்குள்ள பிட்ச் கொஞ்சம் கொஞ்சமாக மாறும் என்றார் அஸ்வின்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை