அசாத்திய சிக்ஸரை அசால்டாக பிடித்து அசத்திய ரஹானே – வீடியோ உள்ளே.
ஐபிஎல் லீக் 2023ல் நடக்கும் 24வது லீக் ஆட்டத்தில் இக்கட்டான நிலையில் ரஹானே பிடித்த கேட்ச் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பெங்களூரு மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்நிலையில் தொடக்கத்தில் டாஸ் வென்ற பெங்களூர
ஐபிஎல் லீக் 2023ல் நடக்கும் 24வது லீக் ஆட்டத்தில் இக்கட்டான நிலையில் ரஹானே பிடித்த கேட்ச் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பெங்களூரு மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்நிலையில் தொடக்கத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளேஸிஸ் பந்து வீச முடிவு செய்தார். அது சரியான முடிவு இல்லை என்பது அவருக்கு பிறகுதான் தெரிய வந்தது.
Ajink-waah🤩
— JioCinema (@JioCinema) April 17, 2023
Rahane's 🔝effort on the boundary saves a certain maximum!#RCBvCSK #IPLonJioCinema #TATAIPL #IPL2023 | @ajinkyarahane88 pic.twitter.com/8Q5YzN4nF5
ருதுராஜ் 3 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதனிடையே வேகமாக பேட்டிங் செய்த ரஹானே 20 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து அணியில் அவுட் ஆனார். டெவோன் கான்வே ஒரு பக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடிக்கொண்டிருந்தார். ஆனாலும் பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பார்னெல் தனது இன்னிங்ஸின் முதல் ஓவரை வீசினார். அவர் RCB க்காக நன்றாகப் பந்துவீசினார், ஆனால் இன்று அவர் கொஞ்சம் ஃபார்ம் அவுட்டாகத் தோன்றினார்.
அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் முதலில் ஒரு பவுண்டரி அடித்தார், பின்னர் கடைசி பந்தில், கான்வே ஒரு அற்புதமான ஷாட்டை அடித்து 6 ரன்கள் எடுத்தார். 45 பந்துகளில் 83 ரன்கள் அடித்த டெவோன் கான்வே சிறப்பாக விளையாடி 6 சிக்ஸர்களும் 6 போர்களும் அடித்து ஹக்ஸர் படேலிடம் ஆட்டமிழந்தார். ஆனாலும் சென்னையின் அதிரடி ஆட்டம் நிற்கவில்லை அவரை தொடர்ந்து சிவம் துபே 27 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அசத்தினார். இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 20ஓவர்கள் முடிவில் 226 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில் 227 ரன்கள் என்ற இலக்கை துரத்திய பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 6 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இதன் பிறகு ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் இன்னிங்ஸைக் கையாண்டனர். மேக்ஸ்வெல் 36 பந்துகளில் 8 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் கேப்டன் டு பிளெசிஸ் 33 பந்துகளில் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 62 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இவர்கள் இருவரும் ஆட்டமிழந்த பிறகு கார்த்திக் 28 ரன்களில் பெரிய இன்னிங்ஸ் ஆட, அனைத்து பேட்ஸ்மேன்களும் தொடர்ந்து விக்கெட்டுகளை இழக்க சென்னை சூப்பர் கிங்ஸ் வித்தியாசத்தில் RCBயை வீழ்த்தியது. இதனிடையே ரஹானே CSK அணிக்காக 4 ரன்களை ஒரு அவரின் போது காப்பாற்றி கொடுத்தார். 8 ஓவரில் ஜடேஜா பபந்துவீசும் வீசும் போது அது சிக்ஸர் லைனிற்கு சென்றது. ஆனால் அங்கே நின்று கொண்டிருந்த ரஹானே திறமையாக காற்றில் பறந்தபடி ஒரு கேட்சை பிடித்து ரசிகர்களை அசத்தினார்.
— Ninja (@IPLcskMSD) April 18, 2023
சொல்லப்போனால் சி எஸ் கே 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதினால் அந்த சிக்ஸரின் ரன்கள் கண்டிப்பாக பெங்களூரு அணிக்கு பக்க பலமாக இருந்திருக்கும். அதோடு ரஹானே டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே தான் சரியாக இருப்பர் என்று நினைத்தவர்கள் மத்தியில் தான் அனைத்திலுமே சிறந்தவன் என்பதை ஒவ்வொரு போட்டியில் நிரூபித்துக்காட்டுகிறார் ரஹானே.