தமிழ் நாட்டு வீரர்களுக்கு ஆசிய கோப்பையில் வாய்ப்பு கிடைக்காத காரணம் என்ன? விளக்கம் கொடுத்த அஜித் அகர்கர்.
அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை 2023 போட்டியானது இந்தியாவில் வரும் அக்டோபர் 5 முதல் தொடங்க இருக்கிறது. ஆனால் இதற்கு முன்பாகவே உலக கோப்பைக்கு தயாராகும் பொருட்டு வரும் ஆகஸ்ட் மாதம் 30 முதல் 2023 ஆசிய கோப்பை தொடரில் இந்தியா கலந்து கொள்ள இருக்கிறது. இந்நிலையி
அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை 2023 போட்டியானது இந்தியாவில் வரும் அக்டோபர் 5 முதல் தொடங்க இருக்கிறது. ஆனால் இதற்கு முன்பாகவே உலக கோப்பைக்கு தயாராகும் பொருட்டு வரும் ஆகஸ்ட் மாதம் 30 முதல் 2023 ஆசிய கோப்பை தொடரில் இந்தியா கலந்து கொள்ள இருக்கிறது. இந்நிலையில் பல மாறுதல்களை புதிய தேர்வுக்குழு தலைவராக பொறுப்பேற்றுள்ள அஜித் அகார்கர் செய்து வருகிறார்.
இந்நிலையில் தான் இன்று ஆசிய கோப்பை போட்டிகளுக்கான இந்திய அணியானது அறிவிக்கப்பட்டது. மேலும் இதனையடுத்து அஜித் அகார்கர், ரோகித் சர்மா ஆகியோர் டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்ட அந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் காயத்திலிருந்து குணமடைந்து சேர்க்கப்பட்டுள்ளனர். ரோஹித் சர்மாவுடன் சுப்மன் கில், விராட் கோலி ஆகியோருடன் இடது கை பேட்ஸ்மேன் பிரச்சினையை தீர்ப்பதற்காக திலக் வர்மா தேர்வாகியுள்ளார்.
மேலும் ஆல் ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியாவும். அக்ஸர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோரும் வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது சிராஜ், முகமது ஷமி, ஷார்துல் தாகூர் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு உலகக் கோப்பையில் வாய்ப்பு கிடைப்பது கடினம் தான் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தான் ஆசிய கோப்பையில் தமிழக வீரர்கள் இல்லாதது ரசிகர்களை ஏமாற்றமடைய கொடுத்துள்ளது.
சொல்லப்போனால் சமீபத்தில் நடந்து மூடிடன்ஹா வளரும் இளம் வீரர்களுக்கான ஆசிய போட்டியில் அற்புதமாக விளையாடிய சாய் சுதர்சன் நல்ல ஃபார்மில் இருந்தும் பேக்-அப் வீரராக கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. இவரோடு விச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் போன்ற தமிழக வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை. இப்படிப்பட்ட நிலையில் தான் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அஜித் அகர்கர் இந்த விஷயம் குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில் “8 அல்லது 9வது இடத்தில் விளையாடுபவர்கள் பேட்டிங் செய்யக்கூடிய வீரர்களாக இருப்பதை நாங்கள் விரும்புகிறோம். அந்த வகையில் அக்சர் படேல் சர்வதேச அளவிலும் ஐபிஎல் தொடரிலும் பேட்டிங்கில் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார். அதனாலேயே வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வாய்ப்பு பெற்ற அவர் மிகவும் கீழ் வரிசையில் பேட்டிங் செய்யக்கூடியவர். அவர் இந்திய அணியில் இருப்பது பேட்டிங் வரிசையின் கீழ் வரிசையில் அணிக்கு ஆதரவாக இருக்கிறது.
Here's the Rohit Sharma-led team for the upcoming #AsiaCup2023 🙌#TeamIndia pic.twitter.com/TdSyyChB0b
— BCCI (@BCCI) August 21, 2023
அதுமட்டுமல்லாமல் மேல் வரிசையில் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை வந்தால் அவரை வைத்து சமாளிக்கலாம். அதே சமயம் நாங்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் அஸ்வின் ஆகியோரை பற்றியும் நினைத்தோம். ஆனால் ஒரு வேகப்பந்து வீச்சாளர் வெளியே இருந்தால் மட்டுமே அவர்களை விளையாட வைக்க முடியும். இருப்பினும் அடுத்த 2 மாதங்களுக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் பெரிய வேலையை செய்வார்கள் என்பதால் அதை எங்களால் செய்ய முடியாது.