இது போன்ற விஷயம் இந்திய கிரிக்கெட்டில் நடப்பதில்லை – அன்றே கணித்ததாக ஆகாஷ் சோப்ரா ஓபன் டாக்.

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தற்போது இந்திய அணியானது விளையாடி வருகிறது. நேற்று நடந்த முதல் போட்டியில் இந்தியா பிரமாதமாக விளையாடி வெஸ்ட் இன்டீஸை ஆல் அவுட் செய்து இந்தியா த்ற்போதுஉ விளையாடி வருகிறது. இந்த தொடரை வழக்கம் போல் இல்லாமல் சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப

By ·

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தற்போது இந்திய அணியானது விளையாடி வருகிறது. நேற்று நடந்த முதல் போட்டியில் இந்தியா பிரமாதமாக விளையாடி வெஸ்ட் இன்டீஸை ஆல் அவுட் செய்து இந்தியா த்ற்போதுஉ விளையாடி வருகிறது. இந்த தொடரை வழக்கம் போல் இல்லாமல் சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஐபிஎல் போட்டியியல் ராஜஸ்தானுக்காக தொடக்க வீரராக களமிறங்கிய ஜெய்ஸ்வால் அற்புதமாக விளையாடினார்.

இதனால் இவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைத்து அதனை சரியாக பயன்படுத்தி 40 ரன்களையும் அடித்து ஆட்டமிழக்கமல் இருக்கிறார். ஆனால் பொதுவாக தொடக்க வீரராக கில் களமிறங்கும் நிலையில் கில் மூன்றாவதாக விளையாட விருப்பப்படுவதாக கேட்டு பின்னர் இந்த போட்டியில் மூன்றாவதாக களமிறங்க இருக்கிறார். இந்நிலையில் தான் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா கில் பேட்டிங் வரிசை குறித்து பேசியுள்ளார்.

ஆகாஷ் சோப்ரா கூறியது :

இது குறித்து அவரது யூடியூப் சேனலில் பேசுகையில் “நம்பர் 3 இல் சுப்மன் இறங்குறார் இதில் எனக்கு ஆச்சரியம் இல்லை. எனது 2020 ட்வீட்டை நீங்கள் நினைவில் வைத்திருந்தால், அவர் அறிமுகமானபோது, ​​அவர் ஒரு 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவுக்காக விளையாடுவார், ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் அவரை கடுபிடிப்பீர்கள். ஆனால் தொடக்க வீரராக அல்ல கீழ் வரிசையில் இறங்குவார் என்று பதிவிட்டிருந்தேன். இப்போது அவரே அந்த விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இப்போது அவர் முன்றது பேட்டிங் செய்கிறார், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஓப்பனிங் செய்கிறார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க ஆட்டக்காரராக விளையாடினார், ஏனென்றால் ஷுப்மான் கில் சென்று அணி நிர்வாகத்திடம் அவர் நம்பர் 3 இல் விளையாட விரும்புவதாகக் கூறினார், ஏனெனில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று அவர் நினைக்கிறார். இது மிகவும் சுவாரசியமான விஷயம் என்று அவர் மேலும் கூறினார்.

மேலும் பேசிய அவர் கூறுகையில் “பொதுவாக, இந்திய கிரிக்கெட்டில் இதுபோன்ற ஒரு விஷயம் நடப்பதில்லை. ஒரு வீரர் சென்று ஒரு குறிப்பிட்ட நிலையில் பேட்டிங் செய்ய விரும்புவதாகவும் அந்த இடத்தை கேட்டு வாங்குகிறார். இந்த மாதிரியாக ஆடம்பரத்தை யாரும் கேட்கவும் இல்லை, யாருக்கும் கொடுக்கவும் இல்லை என்று தன்னுடைய யூடியூப் சேனலில் கூறியிருக்கிறார் ஆகாஷ் சோப்ரா.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை