“4 MI அணியில் வீரர்கள் இந்திய அணியுடன் செல்கிறார்கள், அவர்களில் யாரும் தங்கள் தேர்வைக் கொண்டாட முடியவில்லை” – ஆகாஷ் சோப்ரா கருத்து
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர் பார்த்து காத்துகொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் லக்னோவில் உள்ள எகனா மைதானத்தில் பல பரீட்சை செய்தது. இந்த இரண்டு அணிகளும் ப
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர் பார்த்து காத்துகொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் லக்னோவில் உள்ள எகனா மைதானத்தில் பல பரீட்சை செய்தது. இந்த இரண்டு அணிகளும் புள்ளி பட்டியலில் அடுத்த இடத்திற்கு செல்ல இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற அவசியம் இருந்து வந்தது. லக்னோ அணி புள்ளி பட்டியலில் 6வது இடத்திலும் மும்பை அணி 9 இடத்திலும் இருந்ததது .
லக்னோ அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை மட்டுமே அடித்து இருந்தது. இதில் அதிகபட்சமாக நேஹல் வதேரா 45 ரன்களும் டிம் டேவிட் 35 ரன்களும் இஷான் கிஷன் 32 ரன்களையும் அடித்து இருந்தனர். மும்பை அணிக்கு கடைசி வரை பேட்டிங் இருக்கும் போதும் ஆரமபத்தில் விக்கெட்டுகளை இழந்ததால் மும்பை அணியால் பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியவில்லை.லக்னோ அணி சார்பில் மோசின் கான் இரண்டு விக்கெட்டுகளையும் ஸ்டாய்னிஸ், நவீன் உல் ஹக், மயங்க் யாதவ் மற்றும் ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர்.
அதன் பின் 145 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய லக்னோ அணி ஆரம்பத்தில் சில விக்கெட்டுகளை இழந்து இருந்தாலும் அதன் பின் தங்களது சிறப்பான ஆட்டத்தால் லக்னோ அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்து இருந்தது. இதன் மூலம் லக்னோ அணி புள்ளி பட்டியலில் 3 இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியில் அதிகபட்சமாக ஸ்டாய்னிஸ் 62 ரன்களும் கே.எல் ராகுல் 28 ரன்களையும் அடித்து இருந்தனர். எனவே லக்னோ அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்து இருந்தது. இந்த தோல்வியின் மூலம் மும்பை அணி கிட்ட தட்ட ப்ளே ஆப் ரேசில் இருந்து வெளியேறிவிட்டது என்றும் சொல்லலாம்.
இதில் மும்பை அணியின் வீரர் ரோஹித் ஷர்மா தனது பிறந்த நாளில் அன்று அவர் ஐந்து பந்துகளுக்கு மேல் அவர் விளையாடியது கிடையாது. அதே போல் தான் அவர் நேற்றும் விளையாடி இருந்தார். அவரது ஆட்டம் குறித்து முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில், ரோஹித் ஷர்மாவின் கடந்த நான்கு பிறந்தநாள்களும் ஒன்று, இரண்டு, மூன்று மற்றும் நான்கு. அவர் தனது கடைசி நான்கு பிறந்தநாளிலும் தலா ஐந்து பந்துகளில் விளையாடி ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என அடித்துள்ளார்.
இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது, ஆனால் அவரால் ரன்களை எடுக்க முடியவில்லை. விக்கெட்டுகள் ஒன்றன் பின் ஒன்றாக விழுந்து கொண்டே இருந்தன. மும்பை விளையாடும் கிரிக்கெட்டைப் பற்றி நீங்கள் ஆச்சரியமாகவும் சற்றே அதிர்ச்சியாகவும் உணர்கிறீர்கள். சூர்யகுமார் யாதவ் லெக் சைடில் அவுட் ஆனார். அப்போது திலக் வர்மா ரன் அவுட் ஆனார். ஹர்திக் பாண்டியா – முதல் பந்தில் டக். நான்கு mi வீரர்கள் இந்திய அணியுடன் செல்கிறார்கள். அவர்களில் யாரும் தங்கள் தேர்வைக் கொண்டாட முடியவில்லை, என்று முன்னாள் இந்திய தொடக்க வீரர் மேலும் கூறினார்.